எடுத்தது எங்கே?(1)
தினமலர்-11 Nov 2012
படிப்பாளி ஆகாத எவர் ஒருவரும் படைப்பாளி ஆக முடியாது. அந்த வகையில் படைப்பாளிகள் படித்தவை பலவும் அவர்களின் அடிமனத்தில் ஆழமாகப் பதிந்தும் படிந்தும் கிடக்கின்றன. படைக்கின்றபோது அவை, சில நேரங்களில் அவனை அறிந்தும் பல நேரங்களில் அவனை அறியாமலும் அவனது படைப்புகளில் தலை காட்டும். பல இடங்களில் உருமாறியும் சில இடங்களில் உள்ளபடியும் இடம் பெறுவதைக் காணமுடியும்.கருத்து ஒன்றானாலும் கவிஞன் தன்
கவித்துவத்தை அதில் காட்டியிருப்பான். சொல்வது அவன் ரசித்ததன் எச்சம் எனினும் அதில் அவனது கற்பனையின் உச்சம் இருக்கும். இலக்கியத்தை எளிமைப்படுத்தி, பாமரனுக்குப் புரியவைப்பதாகவும் இருக்கும். அந்த வகையில், கண்ணதாசனின் பல பாடல்களைக் கூறலாம். ஆனால், அந்தக் கருத்துக்கு அவர் என்றுமே உரிமை கொண்டாடியதில்லை. அடுத்தவன் பெற்ற பிள்ளையை தன் பிள்ளை என்று அவர் சொல்லிக்கொண்டதில்லை.
வியட்நாம் வீடு படத்தில் வரும் ‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்ற பாடலில் வரும் இந்த முதலடி,பாரதியார் பாடலில் இருந்து எடுத்தது. அடுத்து வரும் அற்புத வரிகள் அனைத்தும் கண்ணதாசன் எழுதியவை. பாடலை எழுதி முடித்த கண்ணதாசன், படத்தின் டைட்டிலில் பாடல் பாரதியார் என்று போடுங்கள் எனச் சொன்னாராம்.முதல் வரிதான் பாரதியார் எழுதியது என்றாலும், அடுத்து வந்த வைர வரிகளுக்கு வழி ஏற்படுத்தியது பாரதியாரின் வரிகள்தான். அந்த நன்றியை வெளிப்படுத்தத்தான், ‘பாடல் பாரதியார்’ என்று போடச் சொன்னார் கண்ணதாசன். இன்று எத்தனை பேருக்கு இந்த மனம் இருக்கிறது?
திரையுலகில் கண்ணதாசன் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், திரைப்பாடல் எழுதத் தொடங்கியவர் வைரமுத்து, கண்ணதாசன் மறைவு, வைரமுத்துவுக்கு வசதியான பாதையை போட்டுக்கொடுத்தது. பாரதிராஜாவும் இளையராஜாவும் பக்கத்துணையாக இருந்ததால், அவருக்கு வானமும் வசப்பட்டது.
பல ஆயிரம் பாடல்களை எழுதியுள்ள வைரமுத்துவின் பாடல்களிலும் அவர் ரசித்த, புசித்த பல வரிகள் வந்து தலை காட்டுவதைக் காணமுடியும். உருமாற்றம் என்பது தடுமாற்றம் அல்ல. உள்ளதை ஒப்புக்கொண்டுவிட்டால். ஒப்புக்கொள்ளாதபோதுதான், உருவல் என்று விமர்சிக்கப்படுகிறது. அந்த வகையில் வைரமுத்து ரசித்த பலவற்றை திரையுலகு புசிக்கக் கொடுத்தது பற்றி அலசுவதுதான் இந்த தொடர். ஒப்புநோக்கி ரசிப்பதுதான் இந்த தொடரின் நோக்கம். சொல்வதல்ல. தொடர்ந்து வரும் கருத்துகளை வாசியுங்கள். எழுத்தை நேசியுங்கள்.
வியட்நாம் வீடு படத்தில் வரும் ‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்ற பாடலில் வரும் இந்த முதலடி,பாரதியார் பாடலில் இருந்து எடுத்தது. அடுத்து வரும் அற்புத வரிகள் அனைத்தும் கண்ணதாசன் எழுதியவை. பாடலை எழுதி முடித்த கண்ணதாசன், படத்தின் டைட்டிலில் பாடல் பாரதியார் என்று போடுங்கள் எனச் சொன்னாராம்.முதல் வரிதான் பாரதியார் எழுதியது என்றாலும், அடுத்து வந்த வைர வரிகளுக்கு வழி ஏற்படுத்தியது பாரதியாரின் வரிகள்தான். அந்த நன்றியை வெளிப்படுத்தத்தான், ‘பாடல் பாரதியார்’ என்று போடச் சொன்னார் கண்ணதாசன். இன்று எத்தனை பேருக்கு இந்த மனம் இருக்கிறது?
திரையுலகில் கண்ணதாசன் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், திரைப்பாடல் எழுதத் தொடங்கியவர் வைரமுத்து, கண்ணதாசன் மறைவு, வைரமுத்துவுக்கு வசதியான பாதையை போட்டுக்கொடுத்தது. பாரதிராஜாவும் இளையராஜாவும் பக்கத்துணையாக இருந்ததால், அவருக்கு வானமும் வசப்பட்டது.
பல ஆயிரம் பாடல்களை எழுதியுள்ள வைரமுத்துவின் பாடல்களிலும் அவர் ரசித்த, புசித்த பல வரிகள் வந்து தலை காட்டுவதைக் காணமுடியும். உருமாற்றம் என்பது தடுமாற்றம் அல்ல. உள்ளதை ஒப்புக்கொண்டுவிட்டால். ஒப்புக்கொள்ளாதபோதுதான், உருவல் என்று விமர்சிக்கப்படுகிறது. அந்த வகையில் வைரமுத்து ரசித்த பலவற்றை திரையுலகு புசிக்கக் கொடுத்தது பற்றி அலசுவதுதான் இந்த தொடர். ஒப்புநோக்கி ரசிப்பதுதான் இந்த தொடரின் நோக்கம். சொல்வதல்ல. தொடர்ந்து வரும் கருத்துகளை வாசியுங்கள். எழுத்தை நேசியுங்கள்.
![]() |
| 11 Nov 12- FaceBook Comments |
ஃபேஸ்புக் கமெண்ட்ஸ்....
- Madhan Raj அருமையாக உள்ளது. முன் தலைமுறையின் வளமான சிந்தனையும் சுய சிந்தனையும் சேர்ந்துதான் புதிய சிந்தனை பிறக்கமுடியும். அது இயல்பாய் அமைவதற்கே ஓர் உயிரோட்டம் இருக்கும். அருமையான பதிவு. நன்றி.
- Seetha Raman M S Superu....
- Chennai Vaasi பத்த வச்சிட்டியே, பரட்டை.. வசனம்தான் நினைவுக்கு வருகிறது. நேற்று ஒரு சேனலில் ஜானகி அம்மையாரை வெகுநேரம் நிற்கவைத்துக் கொண்டு வைரமுத்து உரையாற்றியதை பார்த்தபோது அறிவுச் செருக்கு என்பதற்கும் அளவில்லையா என்று தோன்றியது. தொடர் பெரிதும் வாசிக்கப்படும் என்பதில் கேள்விக்கு இடமில்லை. வாழ்த்துக்கள்.
- Kumar Ramasamy nandri.
Bhagyalakshmii Dhananjeyan வாழ்த்துகிறோம்.. வரவேற்கிறோம் ...குமார் ராமசாமி அவர்களே, உங்கள் தலைவர் எழுதிய செம்மொழி பாட்டு முழுக்க முழுக்க ஒவ்வொரு வரியும், பலபாடல்களில் இருந்து அப்படி அப்படியே பெயர்த்து எடுக்கப்பட்டவை . ஆனாலும் அந்த பாடல் எழுதியவர் மு.கருணாநிதி என்றே பெயர் தாங்கி வெளி வந்தது. அதையும் விலாவரியாக சொல்வீர்கள் என நம்புகிறேன்.
Kumar Ramasamy ethai sonnalum angathaan vanthu nirkiringa bhagya. anyway, ungal vaazhththukkum varverpukkum nandri.
Raja Subbu super sir
November 12 at 7:06am · Like
அடுத்து பேசிய நான். “வைரமுத்துவைப் பாராட்டவேண்டும் என்று விரும்பினால், வேறு எதாவது ஒரு வரியைச் சொல்லி பாராட்டுங்கள். ‘பொன்மாலைப் பொழுது’ என்று சொல்வது புதிதல்ல.
“ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன்மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்”
என்று வாலி ஏற்கனவே எழுதிவிட்டார் என்று சொன்னேன்.
வைரமுத்துவை கவிஞர் நா.காமராசன் ஒருமுறை மனம் திறந்து பாராட்டினார். விழா ஒன்றில் பேசிய நா.கா.,
“எனக்கு மட்டும் சொந்தம் -உன்
இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும்- எனது
உயிர் உருகும் சத்தம்”
என்ற வரிகளைத் தந்த வைரமுத்துவைப் பாராட்டுகிறேன் என்று மனம் திறந்து பாராட்டினார்.
முதன் முதலில் திரைப்பாடலுக்குப் பாட்டெழுத பாரதிராஜாவிடம் இருந்து வைரமுத்துவுக்கு அழைப்பு வந்தது. முதல் பிரசவத்துக்காக மனைவி பொன்மணியை யை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, பாராதிராஜாவை பார்க்கச் சென்றார் வைரமுத்து. நிழல்கள் திரைப்படத்துக்காக இளையராஜாவின் இசைக்கு பாடல் எழுதினார்.
மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார். மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. “எனக்கும் முதல் பிரசவம் ஆயிற்று” என்று, திரைப்படத்துக்கு தான் முதல் பாடல் எழுதியதை மனைவியிடம் சொல்லி மகிழ்ந்தார் வைரமுத்து. “அந்தப் பாடல் உன் பெயரில்தான் தொடங்குகிறது” என்றும் சொன்னார்.
பொன்மாலைப் பொழுது என்ற அந்தப் பாடலிலேயே, அவர் ரசித்துப் படித்த பாரதிதாசன் தெரிவார்.
ஆம்.
அழகின் சிரிப்பில் கடலைப் பற்றி வர்ணிப்பார் பாவேந்தர். அந்திக் கருக்கல் நெருங்கியது. கறுப்பாக காட்சியளித்த கடல், நிலவு தோன்றியதும், அதன் ஒளிபட்டு பொன்னிறமாக ஜொலித்தது. இதை,
“அதோ பார் கடல்மகள்
தன்னுடை களைந்து
பொன்னுடை பூண்டாள்
என்னென்று கேள்
நிலவுப் பெண் ஒளிகொட்டிற்று”
என்று எழுதுவார் பாவேந்தர்.
இந்த வரிகள் வைரமுத்து மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. இதே கருத்து அவருடைய முதல் பாடலிலேயே உருமாற்றம் பெற்றுள்ளது. ஆம். பாவேந்தர் சொன்னதையே எதிர்மறையாக சிந்தித்துள்ளார் வைரமுத்து. கடல் என்று சொன்னதை, வானம் என்று சொல்கிறார் வைரமுத்து.
“கடல்மகள் தன்னுடை களைந்து
பொன்னுடை பூண்டாள்”
என்பதைத்தான்
“வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்”
என்று சொல்கிறார் வைரமுத்து.
(எடுத்தது வரும்)
Like ·
Ashokan Subbarayan சிறந்த ஒப்புநோக்கு. FYI: ’பொன் அந்தி மாலைப் பொழுது; பொங்கட்டும் இன்ப நினைவு; அன்னத்தின் தோகை உந்தன் மேனியோ...’ என்று ஒரு பாடல் உள்ளது. 'உல்டா’ செய்வதை உருமாற்றம் என்று அழகு தமிழில் குறிப்பிட்டுள்ளது சிறப்பு ! ஆமாம் இந்தந்த கவிஞர்கள்ட்டேர்ந்து சுட்டதுதான் இவை ’ என்று கவிப்பேரரசு’ சொல்ற வரைக்கும் உட மாட்டீங்க போல. கடுமையா ஹோம் ஒர்க் செஞ்சிருப்பது தெரியுது சார் ! ரசிக்கும்படியாக உள்ளது.
November 18 at 9:57am · Unlike · 1
Like · · ShareRanjith Mohan and Arun Sampath like this.
-------
எடுத்தது எங்கே?(2)
இலக்கிய விழா ஒன்றில் பேசிய தமிழறிஞர் ஒருவர், “பொன்மாலைப் பொழுது என்று எழுதிய வைரமுத்துவைப் பாரட்டுகிறேன். மாலைப் பொழுதின் மகத்துவத்தை ‘பொன்மாலை’ என்று சொல்லியிருப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது... இரண்டாயிரம் ஆண்டு இலக்கியத்தில் இல்லாத ஒரு சொல்லாட்சி இது” என்று சொல்லி வைரமுத்துவைப் பாராட்டினார்.அடுத்து பேசிய நான். “வைரமுத்துவைப் பாராட்டவேண்டும் என்று விரும்பினால், வேறு எதாவது ஒரு வரியைச் சொல்லி பாராட்டுங்கள். ‘பொன்மாலைப் பொழுது’ என்று சொல்வது புதிதல்ல.
“ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன்மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்”
என்று வாலி ஏற்கனவே எழுதிவிட்டார் என்று சொன்னேன்.
வைரமுத்துவை கவிஞர் நா.காமராசன் ஒருமுறை மனம் திறந்து பாராட்டினார். விழா ஒன்றில் பேசிய நா.கா.,
“எனக்கு மட்டும் சொந்தம் -உன்
இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும்- எனது
உயிர் உருகும் சத்தம்”
என்ற வரிகளைத் தந்த வைரமுத்துவைப் பாராட்டுகிறேன் என்று மனம் திறந்து பாராட்டினார்.
முதன் முதலில் திரைப்பாடலுக்குப் பாட்டெழுத பாரதிராஜாவிடம் இருந்து வைரமுத்துவுக்கு அழைப்பு வந்தது. முதல் பிரசவத்துக்காக மனைவி பொன்மணியை யை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, பாராதிராஜாவை பார்க்கச் சென்றார் வைரமுத்து. நிழல்கள் திரைப்படத்துக்காக இளையராஜாவின் இசைக்கு பாடல் எழுதினார்.
மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார். மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. “எனக்கும் முதல் பிரசவம் ஆயிற்று” என்று, திரைப்படத்துக்கு தான் முதல் பாடல் எழுதியதை மனைவியிடம் சொல்லி மகிழ்ந்தார் வைரமுத்து. “அந்தப் பாடல் உன் பெயரில்தான் தொடங்குகிறது” என்றும் சொன்னார்.
பொன்மாலைப் பொழுது என்ற அந்தப் பாடலிலேயே, அவர் ரசித்துப் படித்த பாரதிதாசன் தெரிவார்.
ஆம்.
அழகின் சிரிப்பில் கடலைப் பற்றி வர்ணிப்பார் பாவேந்தர். அந்திக் கருக்கல் நெருங்கியது. கறுப்பாக காட்சியளித்த கடல், நிலவு தோன்றியதும், அதன் ஒளிபட்டு பொன்னிறமாக ஜொலித்தது. இதை,
“அதோ பார் கடல்மகள்
தன்னுடை களைந்து
பொன்னுடை பூண்டாள்
என்னென்று கேள்
நிலவுப் பெண் ஒளிகொட்டிற்று”
என்று எழுதுவார் பாவேந்தர்.
இந்த வரிகள் வைரமுத்து மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. இதே கருத்து அவருடைய முதல் பாடலிலேயே உருமாற்றம் பெற்றுள்ளது. ஆம். பாவேந்தர் சொன்னதையே எதிர்மறையாக சிந்தித்துள்ளார் வைரமுத்து. கடல் என்று சொன்னதை, வானம் என்று சொல்கிறார் வைரமுத்து.
“கடல்மகள் தன்னுடை களைந்து
பொன்னுடை பூண்டாள்”
என்பதைத்தான்
“வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்”
என்று சொல்கிறார் வைரமுத்து.
(எடுத்தது வரும்)
Like ·
Ashokan Subbarayan சிறந்த ஒப்புநோக்கு. FYI: ’பொன் அந்தி மாலைப் பொழுது; பொங்கட்டும் இன்ப நினைவு; அன்னத்தின் தோகை உந்தன் மேனியோ...’ என்று ஒரு பாடல் உள்ளது. 'உல்டா’ செய்வதை உருமாற்றம் என்று அழகு தமிழில் குறிப்பிட்டுள்ளது சிறப்பு ! ஆமாம் இந்தந்த கவிஞர்கள்ட்டேர்ந்து சுட்டதுதான் இவை ’ என்று கவிப்பேரரசு’ சொல்ற வரைக்கும் உட மாட்டீங்க போல. கடுமையா ஹோம் ஒர்க் செஞ்சிருப்பது தெரியுது சார் ! ரசிக்கும்படியாக உள்ளது. November 18 at 9:57am · Unlike · 1
Like · · ShareRanjith Mohan and Arun Sampath like this.
எடுத்தது எங்கே? -3
ராஜபார்வை படத்தில் வைரமுத்து எழுதிய அந்திமழை பொழிகிறது பாடல் சூப்பர் ஹிட் ஆனது. அதே நேரத்தில், அதிக விமர்சனத்துக்கும் ஆளானது.
“இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே”
என்று எழுதியிருந்தார் வைரமுத்து.
அது என்ன இந்திரன் தோட்டத்து முந்திரி? என்று கேட்டார்கள். “ஆண்மையை அதிகரிக்கும் சக்தி முந்திரிக்கு உண்டு. இந்திரன் அதிக ஆண்மை உள்ளவன். அதனால் அவன் தோட்டத்து முந்திரிக்கு அதிகமான ஆண்மை சக்தி இருக்கும் என்ற பொருள்பட எழுதினேன்” என்று ஒரு விளக்கம் அளித்தார் வைரமுத்து. முந்திரிக்கு எப்படியோ ஒரு விளக்கம் கொடுத்துவிட்டார்.
சரி; அது என்ன மன்மத நாட்டுக்கு மந்திரியே .. . மன்மத தேசம் என்பது அவன் மட்டுமே ஆளக்கூடியது. அதில் யாரும் மந்திரி வைத்துக்கொள்ளமாட்டார்கள். ஏதோ முந்திரியே மந்திரியே என்று இயைபுக்காக எழுதிவிட்டார் வைரமுத்து.
இப்படி இயைபுக்காக அவர் அடிக்கடி இடறி விழுவதுண்டு.
இளமைக்காலங்கள் படத்தில் ‘ஈரமான ரோசாவே என்னைப் பார்த்து ஏங்காதே’ பாடலில்
“தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடி வா சிந்து”
என்று எழுதியிருக்கிறார். இந்த இரண்டு அடிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
“சாத்துக்குடி துõத்துக்குடி
என்ன நீயும் ஏத்துகடி”
என்ற பாடலைப் போன்றதுதான் இது.
“தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
எந்நாளும் மாறாது நான் கொண்ட அன்பு”
என்று எழுதியிருந்தாலும் ஓர் அர்த்தம் இருந்திருக்கும். பாவம் அவருக்கு ஏனோ அப்படி தோன்றவில்லை. முதல் அடி ‘பந்து’ என்று முடிந்ததால் அடுத்த அடி ‘சிந்து’ என்று முடிக்க வேண்டும் என்பதற்காக இப்படி எழுதியுள்ளார்.
சரி; ராஜ பார்வை பாடலுக்கு வருகிறேன்.
“தொட்டியில் நீர் கொதிக்குதடி- நீ
தொட்ட இடம் மட்டும் சில்லென்றிருக்குதடி”
என்று எழுதுவார் பாரதிதாசன்.
இதையே எதிர்மறையாக சிந்தித்து,
அந்தி மழை பொழிகிறது பாடலில் பயன்படுத்தியுள்ளார் வைரமுத்து.
தண்ணீ ர் கொதிக்கிறது. அவள் உடல் சில்லென்று இருக்கிறது. அதாவது கொதிக்கின்ற நீரில் கூட அவள் தொட்ட இடம் சில்லென்று ஆகிற அளவுக்கு அவள் குளிர்ச்சியாக இருக்கிறாள் என்று பாவேந்தர் எழுதியதை, அப்படியே திருப்பிப் போடுகிறார் வைரமுத்து.
“தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது”
என்று எழுதுகிறார்.
பாவேந்தர் பாடலில் நீர் கொதிக்கிறது.<உடல் சில்லென்று இருக்கிறது. வைரமுத்து அதை, தண்ணீர் சில்லென்று இருக்கிறது. அதில் நிற்கும்போதும் வியர்க்கும் அளவுக்கு அவன் உடல் கொதிக்கின்றது என்று எழுதுகிறார்.
“பருவம் ஒரு சிறகுதான்
வானில்
பறக்க வழியில்லாதபோது
சிறகே ஒரு சுமைதான்”
என்று எழுதியுள்ளார் மு. மேத்தா.
சிறகு இருந்தால் பறக்க வேண்டும். பறக்க முடியாத போது? பயன்படாத எந்த ஒன்றையும் துõக்கிச் சுமப்பது சுமைதானே.
இதையே இமையில் கொண்டுபோய் வைக்கிறார் வைரமுத்து. இமை என்பது, கண்மூடி உறங்குவதற்கு. உறங்க முடியாதபோது இமையும் சுமைதானே. ‘சிறகே ஒரு சுமைதான்’ என்று மேத்தா சொன்னதை
“இமைகளும் சுமையடி இளமையிலே”
என்று அந்தி மழை பொழிகிறது பாடலில் எழுதுகிறார் வைரமுத்து.
(எடுத்தது வரும்)
Like · · Share
December 9 at 3:59am · LikeKumar Ramasamy aduththa vaaram solliduvomla. athu patri sollanumna niraiya ezhutha vendu ullathu... ennna paanna...2 varyum 2 idaththula irunthu vanthirukku.
December 9 at 4:01am · Unlike · 1
அப்படி, தலைவன் பிரிந்து சென்றதால் வருந்தும் தலைவி, அவன் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து, கண்கள் பொலிவு இழக்கிறாள். அவன் சென்ற நாளை எண்ணி எண்ணிப் பார்த்து வருந்துகிறாள்.
விரல் விட்டு எண்ணுவது ஒரு வகை. விரலை ஒற்றி எண்ணுவது இன்னொரு வகை. அதாவது, பெருவிரல் நுனியால் மற்ற விரல்களின் நுனியை தொட்டு, ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுவார்கள். அப்படி தலைவன் பிரிந்து சென்ற நாட்களை விரலை ஒற்றி ஒற்றி எண்ணி எண்ணிப் பார்க்கிறாள் தலைவி. இவ்வாறு எண்ணி எண்ணியே அவளின் விரல்கள் தேய்ந்துவிட்டன என்கிறார் திருவள்ளுவர். அந்தக் குறள் இதோ...
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
இலங்கையின் அசோக வனத்தில் சீதையை சிறை வைத்துள்ளான் இராவணன். அங்கே,ராமனை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் விடுகிறாள் சீதை. அந்தக் கண்ணீரில் அவளது சேலை நனைகிறது. துன்பத்தாலும், தன் நிலையை எண்ணி அவள் விடும் பெருமூச்சாலும் உண்டாகும் <உடல் வெப்பத்தால், கண்ணீரால் நனைந்த சேலை காய்ந்துவிடுகிறது என்று கம்பன் சொல்வான்.
ஒப்பினான்தனை நினைதொறும்
நெடுங்கண் உகுத்த
அப்பினால் நனைந்து அருந்துயர்
உயிர்ப்புடை யாக்கை
வெப்பினால்புலர்ந்த ஒரு நிலை
உறாத மென்துகிலாள்
என்பான் கம்பன்.
‘நாளொற்றித் தேய்ந்த விரல்’ என்று வள்ளுவனும் ‘வெப்பினால்புலர்ந்த ஒரு நிலை உறாத மென்துகிலாள்’ என்று கம்பனும் சொன்னதைத்தான் பாலை வனச்சோலை படத்தில் அப்படியே கையாண்டிருப்பார் வைரமுத்து.
அந்தப் படத்தில் வரும் ‘ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு’ பாடலில்
மாலை சூடும் தேதி எண்ணி பத்துவிரல் தேயும்- இவ
இழுத்துவிடும் பெருமூச்சில் ஈரச் சேலை காயும்
என்கிறார் வைரமுத்து.
தவப்புதல்வன் படத்தில்,
இசை கேட்டால் புவி அசைந்தாடும்- அது
இறைவன் அருளாகும்
என்று ஒரு பாடல். கண்ணதாசன் எழுதியது. 1970களில் வெளியான இந்தப் படப்பாடல் மிகவும் பிரலமானது. ‘கடல் மகள் தன்னுடை களைந்து பொன்னுடை பூண்டாள்’ என்று பாரதிதாசன் சொன்னதை எதிர்மறையாக சிந்தித்து நிழல்கள் படத்தின் ‘பொன் மாலைப்பொழுது’ பாடலில் ‘வானமகள் நாணுகிறாள்’ என்று சொன்னதுது போலவே, ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ என்ற வரியையும் எதிர்மறையாக சிந்திக்கிறார் வைரமுத்து.
காதல் ஓவியம் படத்தில் வரும் ‘அம்மா அழகே’ என்பாடலில்
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
என்பதையே அப்படியே மாற்றி
ஆகாயம் என்பாட்டில் அசைகின்றது- என்
சங்கீதம் பொய் என்று யார் சொன்னது
என்று எழுகிறார்.
‘
(எடுத்தது வரும்)
Like · · Share

Thanasekara Pandian அழகான கருத்து...
December 17 at 10:33pm · Like
முதல்வன் படப் பாடலான ‘உப்புக்கருவாடு ஊறவச்ச சோறு’ பாட்டில் வரும்
‘முத்தமிட்டு நெத்தியில
மார்புக்கு மத்தியில
செத்துவிட தோணுதடி எனக்கு’
என்ற வரிகளைச் சொல்லிதான் வியந்துபோனார் நண்பர்.
இதைக் கேட்டதும் நான் சொன்னேன்...
நாகூர் அனீபா பாடிய ‘மதினா நகருக்கு போக வேண்டும்’ என்ற பாடலில்,
நேருக்கு நேர் நின்று
நெஞ்சத்தில் முகம் வைத்து
ஆரத் தழுவி என் ஆவி பிரிய வேண்டும்
என்று வரும் எனச் சொன்னேன். அதற்கு மேல் நான் எதுவும் விளக்கக்கூட வில்லை. ‘ அப்படியா? என்னமோ நினைச்சு வியந்தேன்...பொசுக்குன்னு ஆக்கிட்டிங்களே’ என்றார் நண்பர்.
மனிதன் திரைப்படத்தில் இடம் பெற்ற
வானத்தைப் பார்த்தேன்;
பூமியைப் பார்த்தேன்;
மனுஷனை இன்னும் பார்க்கலையே
பாடலில்,
குரங்கினில் இருந்து பிறந்தானா?
குரங்கை மனிதன் பெற்றானா?
இரண்டு பேரும் இல்லையே!
அது ரொம்ப தொல்லையே!
என்று வரும். இதைக் கேட்டவுடன் பாவேந்தர்தான் என் நினைவுக்கு வந்தார்.
குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்கிறது டார்வின் தத்துவம். சிலரைப் பார்த்து ‘ அவனா? அவன் கிடக்கிறான் குரங்குப் பயல்’ என்று சிலர் திட்டுவதைப் பார்க்கிறோம். குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்று பொருளில்தான் இப்படி திட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, குரங்கின் குணம் அவனிடம் இருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனாலும் குரங்கில் இருந்து மனிதன் வந்தானாஉ மனிதனில் இருந்து குரங்கு பிறந்ததா என்ற ஒரு விவாதமும் ஏனோ இருந்துகொண்டுள்ளது.
இதைத்தான் பாவேந்தர் பாரதிதாசன் ஒரு கவிதையில்
குரங்கினின்று மனிதன் வந்தானா?
மனிதனிலிருந்து குரங்கு வந்ததா?
வையகத்தை வைதிலேன்
ஐயப்பட்டேன், ஆய்க அறிஞரே!
என்று எழுதியுள்ளார். இந்தக் கவிதையில் வரும் அதே வரிகளும் அதே கருத்தும்தான் வைரமுத்து எழுதியுள்ள மனிதன் படப்பாடலில் அப்படியேயும் கொஞ்சம் உருமாற்றம் பெற்றும் இடம் பெற்றுள்ளது.
“இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே”
என்று எழுதியிருந்தார் வைரமுத்து.
அது என்ன இந்திரன் தோட்டத்து முந்திரி? என்று கேட்டார்கள். “ஆண்மையை அதிகரிக்கும் சக்தி முந்திரிக்கு உண்டு. இந்திரன் அதிக ஆண்மை உள்ளவன். அதனால் அவன் தோட்டத்து முந்திரிக்கு அதிகமான ஆண்மை சக்தி இருக்கும் என்ற பொருள்பட எழுதினேன்” என்று ஒரு விளக்கம் அளித்தார் வைரமுத்து. முந்திரிக்கு எப்படியோ ஒரு விளக்கம் கொடுத்துவிட்டார்.
சரி; அது என்ன மன்மத நாட்டுக்கு மந்திரியே .. . மன்மத தேசம் என்பது அவன் மட்டுமே ஆளக்கூடியது. அதில் யாரும் மந்திரி வைத்துக்கொள்ளமாட்டார்கள். ஏதோ முந்திரியே மந்திரியே என்று இயைபுக்காக எழுதிவிட்டார் வைரமுத்து.
இப்படி இயைபுக்காக அவர் அடிக்கடி இடறி விழுவதுண்டு.
இளமைக்காலங்கள் படத்தில் ‘ஈரமான ரோசாவே என்னைப் பார்த்து ஏங்காதே’ பாடலில்
“தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடி வா சிந்து”
என்று எழுதியிருக்கிறார். இந்த இரண்டு அடிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
“சாத்துக்குடி துõத்துக்குடி
என்ன நீயும் ஏத்துகடி”
என்ற பாடலைப் போன்றதுதான் இது.
“தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
எந்நாளும் மாறாது நான் கொண்ட அன்பு”
என்று எழுதியிருந்தாலும் ஓர் அர்த்தம் இருந்திருக்கும். பாவம் அவருக்கு ஏனோ அப்படி தோன்றவில்லை. முதல் அடி ‘பந்து’ என்று முடிந்ததால் அடுத்த அடி ‘சிந்து’ என்று முடிக்க வேண்டும் என்பதற்காக இப்படி எழுதியுள்ளார்.
சரி; ராஜ பார்வை பாடலுக்கு வருகிறேன்.
“தொட்டியில் நீர் கொதிக்குதடி- நீ
தொட்ட இடம் மட்டும் சில்லென்றிருக்குதடி”
என்று எழுதுவார் பாரதிதாசன்.
இதையே எதிர்மறையாக சிந்தித்து,
அந்தி மழை பொழிகிறது பாடலில் பயன்படுத்தியுள்ளார் வைரமுத்து.
தண்ணீ ர் கொதிக்கிறது. அவள் உடல் சில்லென்று இருக்கிறது. அதாவது கொதிக்கின்ற நீரில் கூட அவள் தொட்ட இடம் சில்லென்று ஆகிற அளவுக்கு அவள் குளிர்ச்சியாக இருக்கிறாள் என்று பாவேந்தர் எழுதியதை, அப்படியே திருப்பிப் போடுகிறார் வைரமுத்து.
“தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது”
என்று எழுதுகிறார்.
பாவேந்தர் பாடலில் நீர் கொதிக்கிறது.<உடல் சில்லென்று இருக்கிறது. வைரமுத்து அதை, தண்ணீர் சில்லென்று இருக்கிறது. அதில் நிற்கும்போதும் வியர்க்கும் அளவுக்கு அவன் உடல் கொதிக்கின்றது என்று எழுதுகிறார்.
“பருவம் ஒரு சிறகுதான்
வானில்
பறக்க வழியில்லாதபோது
சிறகே ஒரு சுமைதான்”
என்று எழுதியுள்ளார் மு. மேத்தா.
சிறகு இருந்தால் பறக்க வேண்டும். பறக்க முடியாத போது? பயன்படாத எந்த ஒன்றையும் துõக்கிச் சுமப்பது சுமைதானே.
இதையே இமையில் கொண்டுபோய் வைக்கிறார் வைரமுத்து. இமை என்பது, கண்மூடி உறங்குவதற்கு. உறங்க முடியாதபோது இமையும் சுமைதானே. ‘சிறகே ஒரு சுமைதான்’ என்று மேத்தா சொன்னதை
“இமைகளும் சுமையடி இளமையிலே”
என்று அந்தி மழை பொழிகிறது பாடலில் எழுதுகிறார் வைரமுத்து.
(எடுத்தது வரும்)
Like · · Share
குடும்பத்தலைவியை ‘இல்லாள்’ என்று சொல்கிறோம். ஆனால், குடும்பத்தலைவரை ‘இல்லான்’ என்று சொல்ல முடியாது. காரணம் ‘இல்லான்’ என்றால் ‘இல்லாதவன்’ என்ற பொருள்படும். தலைவன், தலைவி என்று சொல்வது போல, ‘புலவன்’ என்பதன் பெண்பாலாக ‘புலவி’ என்று சொல்ல முடியாது. புலவி என்றால் ஊடல் என்று பொருள்படும். பொதுவாக புலவன் என்று யாரும் சொல்வதில்லை. மரியாதை கருதி புலவர் என்றே சொல்கின்றனர். பெண்ணாக இருந்தால் ‘பெண்பால் புலவர்’ என்றே சொல்கின்றனர்.
ஒரு பெண்பால் புலவருக்கும் ஆண்பால் புலவருக்கும் மோதல் எற்பட்டதாம். ஆண்பால் புலவர் ஒரு நாள், “ஒரு காலில் நாலிலை பந்தலடி” என்று விடுகதை போட்டாராம். ‘டி’ என்றதால் கோபமடைந்த பெண்பால் புலவர், “ஆரையடா சொன்னாய்...அது ஆரைக் கீறையடா” என்று பதிலடி கொடுத்தாராம். ஒரு ‘டி’ போட்டதற்கு இரண்டு ‘டா’ போட்டார் பெண்பால் புலவர். என் சிறுவயதில் இப்படி ஒரு கதை சொன்னார் என் அப்பா.
புலவர்கள், இலக்கியவாதிகள் மோதிக்கொண்டால் கூட சுவாரசியமாகத்தான் இருக்கும். கற்கண்டும் கற்கண்டும் மோதிக்கொண்டால் கற்கண்டுதானே கிடைக்கும். அதனால்தான் புலவர்கள் திட்டினாலும் கூட தித்திக்கும். திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தவர் கண்ணதாசன். இது பற்றி ஒரு முறை கருணாநிதி கூறுகையில்,
‘திட்டுகின்றாய் என்றாலும்
தீந்தமிழால் என்பதனால்- அதை
பிட்டு என நினைத்தே சுவைத்திட்டேன்’
என்று சொன்னார்.
திரைப்பட பாடலாசிரியர் முத்துலிங்கத்துக்கும் வைரமுத்துவுக்கும் ஒரு முறை மோதல் வந்தது. மௌன கீதங்கள் படத்தில் “டாடி..டாடி.. ஓ மை டாடி...’ என்ற பாடலில்
“கøயோரம் நண்டெல்லாம்
தான் பெற்ற குஞ்சோடு
கைகோர்த்து விளையாடுதே”
என்று எழுதியிருப்பார் வைரமுத்து.
இதை விமர்சித்து ஒரு வார இதழில் எழுதினார் கவிஞர் முத்துலிங்கம்.
“நண்டு முட்டையிட்டுவிட்டு போய்விடும். கோழி போல அடை காக்காது. இதனால், தன் குஞ்சு எது என்றே நண்டுக்கு தெரியாது. இது தெரியாமல், ‘கரையோரம் நண்டெல்லாம் தான் பெற்ற குஞ்சோடு கைகோர்த்து விளையாடுதே’ என்று எழுதியிருக்கிறாரே. வைரமுத்துவுக்கு விவரம் தெரியவில்லை. என்ன பாட்டெழுதுகிறார் அவர்?” என்று கேட்டு கிண்டலடித்தார் முத்துலிங்கம்.
அடுத்த வாரம் வைரமுத்துவின் விமர்சனம். “முத்துலிங்கம் என்ன பாட்டெழுதுகிறார்?
‘புடி புடி கோழி
முட்டைக் கோழி- அதை
புடிச்சாந்து
கொழம்பு வைப்போம் வாடி’
என்று எழுதுகிறாரே முத்துலிங்கம். இதெல்லாம் ஒரு பாட்டா?” என்று கேட்டார் வைரமுத்து. இப்படி இவர்களின் மோதல் சுவாரசியமாக இருந்தது.
பாலைவனச் சோலை படத்துக்குதான் முதன்முதலாக எல்லா பாடல்களையும் வைரமுத்துவே எழுதினார். இந்தப் படத்தின் பாடலிலும் அவர் படித்தவை உருமாற்றம் பெற்று வரும்.
‘ஆளானாலும் ஆளு - இவ
அழுத்தமான ஆளு’
பாடலில் வரும் வரிகள் எங்கிருந்து வந்தது தெரியுமா?
(எடுத்தது வரும்)
Like · · Share
5 people like this.

Hardish Arivazhagan Vairamuthu-vai
Vaiyura "Muthu" sir neengal... intha Vara vikadan medai-il, thannai arimugam seitha Ilayaraja-vai maraimugamaga avamanam seithu irukkirar...!
December 9 at 2:17am via mobile · Like
ஒரு பெண்பால் புலவருக்கும் ஆண்பால் புலவருக்கும் மோதல் எற்பட்டதாம். ஆண்பால் புலவர் ஒரு நாள், “ஒரு காலில் நாலிலை பந்தலடி” என்று விடுகதை போட்டாராம். ‘டி’ என்றதால் கோபமடைந்த பெண்பால் புலவர், “ஆரையடா சொன்னாய்...அது ஆரைக் கீறையடா” என்று பதிலடி கொடுத்தாராம். ஒரு ‘டி’ போட்டதற்கு இரண்டு ‘டா’ போட்டார் பெண்பால் புலவர். என் சிறுவயதில் இப்படி ஒரு கதை சொன்னார் என் அப்பா.
புலவர்கள், இலக்கியவாதிகள் மோதிக்கொண்டால் கூட சுவாரசியமாகத்தான் இருக்கும். கற்கண்டும் கற்கண்டும் மோதிக்கொண்டால் கற்கண்டுதானே கிடைக்கும். அதனால்தான் புலவர்கள் திட்டினாலும் கூட தித்திக்கும். திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தவர் கண்ணதாசன். இது பற்றி ஒரு முறை கருணாநிதி கூறுகையில்,
‘திட்டுகின்றாய் என்றாலும்
தீந்தமிழால் என்பதனால்- அதை
பிட்டு என நினைத்தே சுவைத்திட்டேன்’
என்று சொன்னார்.
திரைப்பட பாடலாசிரியர் முத்துலிங்கத்துக்கும் வைரமுத்துவுக்கும் ஒரு முறை மோதல் வந்தது. மௌன கீதங்கள் படத்தில் “டாடி..டாடி.. ஓ மை டாடி...’ என்ற பாடலில்
“கøயோரம் நண்டெல்லாம்
தான் பெற்ற குஞ்சோடு
கைகோர்த்து விளையாடுதே”
என்று எழுதியிருப்பார் வைரமுத்து.
இதை விமர்சித்து ஒரு வார இதழில் எழுதினார் கவிஞர் முத்துலிங்கம்.
“நண்டு முட்டையிட்டுவிட்டு போய்விடும். கோழி போல அடை காக்காது. இதனால், தன் குஞ்சு எது என்றே நண்டுக்கு தெரியாது. இது தெரியாமல், ‘கரையோரம் நண்டெல்லாம் தான் பெற்ற குஞ்சோடு கைகோர்த்து விளையாடுதே’ என்று எழுதியிருக்கிறாரே. வைரமுத்துவுக்கு விவரம் தெரியவில்லை. என்ன பாட்டெழுதுகிறார் அவர்?” என்று கேட்டு கிண்டலடித்தார் முத்துலிங்கம்.
அடுத்த வாரம் வைரமுத்துவின் விமர்சனம். “முத்துலிங்கம் என்ன பாட்டெழுதுகிறார்?
‘புடி புடி கோழி
முட்டைக் கோழி- அதை
புடிச்சாந்து
கொழம்பு வைப்போம் வாடி’
என்று எழுதுகிறாரே முத்துலிங்கம். இதெல்லாம் ஒரு பாட்டா?” என்று கேட்டார் வைரமுத்து. இப்படி இவர்களின் மோதல் சுவாரசியமாக இருந்தது.
பாலைவனச் சோலை படத்துக்குதான் முதன்முதலாக எல்லா பாடல்களையும் வைரமுத்துவே எழுதினார். இந்தப் படத்தின் பாடலிலும் அவர் படித்தவை உருமாற்றம் பெற்று வரும்.
‘ஆளானாலும் ஆளு - இவ
அழுத்தமான ஆளு’
பாடலில் வரும் வரிகள் எங்கிருந்து வந்தது தெரியுமா?
(எடுத்தது வரும்)
Like · · Share
5 people like this.

Hardish Arivazhagan Vairamuthu-vai
Vaiyura "Muthu" sir neengal... intha Vara vikadan medai-il, thannai arimugam seitha Ilayaraja-vai maraimugamaga avamanam seithu irukkirar...!
December 9 at 2:17am via mobile · Like
Ashokan Subbarayan எல்லாக் கவிஞர்களும் கொஞ்சமாவது அடிப்படை அறிவியல் படிங்க என்பார் திரு சுஜாதா. நல்ல வேளை நம்ம ஆள் அதெல்லாம் படிக்கல போல. டெலிஃபோன் மணிபோல் சிரிச்சா எப்படி இருக்கும் சார்? (பி. கு.:கீரை - கீறை என்று வந்துள்ளது, கரையோரம் - கøயோரம்) ; ஆளானாலும் ஆளு பாடல் சுட்ட இடம் சொல்லாமல் விட்டுட்டீங்க சார். அழுத்தமான ஆள்தான் நீங்க
December 9 at 3:59am · LikeKumar Ramasamy aduththa vaaram solliduvomla. athu patri sollanumna niraiya ezhutha vendu ullathu... ennna paanna...2 varyum 2 idaththula irunthu vanthirukku. எடுத்தது எங்கே- 6
பழந்தமிழ் இலக்கியங்களில் காதலன், காதலியை ‘தலைவன், தலைவி’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். தலைவியைப் பிரிந்து தலைவன் பொருள் தேடச் செல்வான். இதற்குப் ‘பொருள்வயிற் பிரிவு’ என்று பெயர். இந்தப் பிரிவுக் காலம் மூன்று மாதங்களைத் தாண்டக் கூடாது.அப்படி, தலைவன் பிரிந்து சென்றதால் வருந்தும் தலைவி, அவன் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து, கண்கள் பொலிவு இழக்கிறாள். அவன் சென்ற நாளை எண்ணி எண்ணிப் பார்த்து வருந்துகிறாள்.
விரல் விட்டு எண்ணுவது ஒரு வகை. விரலை ஒற்றி எண்ணுவது இன்னொரு வகை. அதாவது, பெருவிரல் நுனியால் மற்ற விரல்களின் நுனியை தொட்டு, ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணுவார்கள். அப்படி தலைவன் பிரிந்து சென்ற நாட்களை விரலை ஒற்றி ஒற்றி எண்ணி எண்ணிப் பார்க்கிறாள் தலைவி. இவ்வாறு எண்ணி எண்ணியே அவளின் விரல்கள் தேய்ந்துவிட்டன என்கிறார் திருவள்ளுவர். அந்தக் குறள் இதோ...
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
இலங்கையின் அசோக வனத்தில் சீதையை சிறை வைத்துள்ளான் இராவணன். அங்கே,ராமனை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் விடுகிறாள் சீதை. அந்தக் கண்ணீரில் அவளது சேலை நனைகிறது. துன்பத்தாலும், தன் நிலையை எண்ணி அவள் விடும் பெருமூச்சாலும் உண்டாகும் <உடல் வெப்பத்தால், கண்ணீரால் நனைந்த சேலை காய்ந்துவிடுகிறது என்று கம்பன் சொல்வான்.
ஒப்பினான்தனை நினைதொறும்
நெடுங்கண் உகுத்த
அப்பினால் நனைந்து அருந்துயர்
உயிர்ப்புடை யாக்கை
வெப்பினால்புலர்ந்த ஒரு நிலை
உறாத மென்துகிலாள்
என்பான் கம்பன்.
‘நாளொற்றித் தேய்ந்த விரல்’ என்று வள்ளுவனும் ‘வெப்பினால்புலர்ந்த ஒரு நிலை உறாத மென்துகிலாள்’ என்று கம்பனும் சொன்னதைத்தான் பாலை வனச்சோலை படத்தில் அப்படியே கையாண்டிருப்பார் வைரமுத்து.
அந்தப் படத்தில் வரும் ‘ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு’ பாடலில்
மாலை சூடும் தேதி எண்ணி பத்துவிரல் தேயும்- இவ
இழுத்துவிடும் பெருமூச்சில் ஈரச் சேலை காயும்
என்கிறார் வைரமுத்து.
தவப்புதல்வன் படத்தில்,
இசை கேட்டால் புவி அசைந்தாடும்- அது
இறைவன் அருளாகும்
என்று ஒரு பாடல். கண்ணதாசன் எழுதியது. 1970களில் வெளியான இந்தப் படப்பாடல் மிகவும் பிரலமானது. ‘கடல் மகள் தன்னுடை களைந்து பொன்னுடை பூண்டாள்’ என்று பாரதிதாசன் சொன்னதை எதிர்மறையாக சிந்தித்து நிழல்கள் படத்தின் ‘பொன் மாலைப்பொழுது’ பாடலில் ‘வானமகள் நாணுகிறாள்’ என்று சொன்னதுது போலவே, ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ என்ற வரியையும் எதிர்மறையாக சிந்திக்கிறார் வைரமுத்து.
காதல் ஓவியம் படத்தில் வரும் ‘அம்மா அழகே’ என்பாடலில்
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
என்பதையே அப்படியே மாற்றி
ஆகாயம் என்பாட்டில் அசைகின்றது- என்
சங்கீதம் பொய் என்று யார் சொன்னது
என்று எழுகிறார்.
‘
(எடுத்தது வரும்)
Like · · Share
7 people like this.
ரப்பர் பூக்கள் கோவை ஆஹா அருமை
Siva Raj tamil thean.... ithai paditthal tamil ilakkiyam pidikkathavarkalukku kooda pikkum......!!! suupppeeerrrr.....
December 16 at 4:18am via mobile · Like
Ashokan Subbarayan எண்ணும்
முறைகளை நீங்கள் தந்துள்ள விதம் என்னைப் புல்லரிக்க வைக்கிறது. உங்கள்
கடின உழைப்பும் புலமையும் அதில் புலப்படுகிறது.’மாலை சூடும் தேதி’ என்பது
‘மாலை சூடும் நாளை’ என்று வரும் என நினைவு. சரிபார்க்கிறேன். ஒவ்வொரு
வாரமும் இத்தொடரில் எனக்கு மிகவும் பிடித்த வரி எது தெரியுமா?
.....’எடுத்தது வரும்’ என்பதுதான்
Kumar Ramasamy எண்ணும் முறைகளை நீங்கள் தந்துள்ள விதம் என்னைப் புல்லரிக்க வைக்கிறது.///paaraatta? kindala?
Ashokan Subbarayan சத்தியமா பாராட்டுதான்...! சூடம் வாங்கித் தந்தீங்கன்னா சத்தியம் பண்றேன் !
Kumar Ramasamy nandri doctor. ungalai nambaamal yaarai nambuvathu?
Seetha Raman M S Nanbarkalai nambungal Kumar sir...
மன்னை முத்துக்குமார் நல்ல தலைப்போடு பல கருத்து திருடல்களை கண்டுபிடிக்கும் புலனாய்வு துறையே..தொடர்க.
M.k. Jayasreekrishnan super sir

Thanasekara Pandian அழகான கருத்து...
December 17 at 10:33pm · Like
எடுத்தது எங்கே? -7
December 27, 2012
அமர தீபம் படத்துக்கு பாட்டெழுதும்படி கவிஞர்
தஞ்சை ராமையாதாசிடம் கேட்டார் இயக்குனர் ஸ்ரீதர். பாட்டு ஜாலியானதாக இருக்க
வேண்டும் என்றார்.
ஜாலிலோ ஜிம்கானா
டோலிலோ கும்கானா
என்று எழுதிக்கொடுத்தார் ராமையாதாஸ்.
இதுக்கு என்ன அர்த்தம்? ஒன்னும் புரியவில்லையே என்றார் ஸ்ரீதர்.
‘படத்தில் குறவன்- குறத்தி பாடும் பாடல்தானே இது. நரிக்குறவர் பாஷை எனக்கும் தெரியாது. உனக்கும் தெரியாது. இதில் அர்த்தம் புரியாட்டி என்ன? பாட்டை எடுத்துக்கொண்டு போய் ரெக்கார்டு பண்ணு. படம் நல்லா ஓடும்’ என்று சொல்லி அனுப்பினார் ராமையாதாஸ்.
இதுபோன்ற பழைய பாடல்களைக் குறிப்பிட்டு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார் வைரமுத்து. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,
முக்காலும் காலும் ஒண்ணு
ஒங்கக்காளும் நானும் ஒண்ணு
என்றெல்லாம் பாட்டெழுதினார்கள். இப்படி இருந்த தமிழ்த் திரைப்பாடலில் படிமங்களைப் புகுத்தி புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளேன் என்றார்.
வைரமுத்து இப்படிச் சொல்லிய சில மாதங்களில் அம்மன்கோவில் கிழக்காலே படம் வெளியானது. அந்தப்படத்துக்காக
நம்ம கடைவீதி கலகலக்கும்
என் அக்காமக அவ நடந்து வந்தா
என்ற பாடலை எழுதினார் வைரமுத்து. இந்தப் பாடலில், ‘முக்காலும் காலும் ஒண்ணு’ என்ற பழைய பாடல் வரியை அப்படியே எடுத்து கையாண்டுள்ளார்.
கடைவீதி கலகலக்கும் பாடலில்
அடி முக்காலும் காலும் ஒண்ணு
இனி ஒண்ணோட நானும் ஒண்ணு
என்று எழுதி புதிய ‘பரிணாம’த்தை ஏற்படுத்தியுள்ளார்.
துõக்குத் துõக்கி படத்தில் ஒரு பாடல். மருதகாசி எழுதியது.
கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த
மின்னொளியே ஏன் மவுனம்
வேறெதிலே உந்தன் கவனம்
என்று எழுதியுள்ளார் மருதகாசி. இந்தப் பாடல் முடியும்போது,
கண்வழி புகுந்து கருத்தினில் கலந்தே
கனிவுறும் காதல் ஜோதி
காண்போமே பாதி பாதி
என்று முடிகிறது.
இந்தப் பாடல்தான், வைரமுத்துவின் சிந்தனையில் புதிய ‘பரிணாமம்’ பெற்று
அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெற்றுள்ளது.
கண்வழி புகுந்து கருத்தினில் கலந்தே
கனிவுறும் காதல் ஜோதி
என்ற வரிகளை
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
என்று எழுதுகிறார் வைரமுத்து.
சங்கர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனபடம் முதல்வன். இதன் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்தப் படத்தில் வரும் ‘உப்புக் கருவாடு ஊற வச்ச சோறு’ என்ற பாடலும் சூப்பர் ஹிட். வைரமுத்து எழுதியது.
இந்தப் பாடலைக் கேட்ட நண்பர் ஒருவர், அதில் வரும் ஒரு வரியைச் சொல்லி, ‘ஆஹா...என்ன அற்புதம்’ என்று வியந்து பாராட்டினார். உடனே நான், அந்த வரி எங்கிருந்து வந்தது என்பதை அவருக்குச் சொன்னேன்.
“அப்படியா? பாடலைக் கேட்டபோது நான் வியந்துபோனேன். அதை பொசுக்கென்று ஆக்கிவிட்டீர்களே” என்றார்.
ஜாலிலோ ஜிம்கானா
டோலிலோ கும்கானா
என்று எழுதிக்கொடுத்தார் ராமையாதாஸ்.
இதுக்கு என்ன அர்த்தம்? ஒன்னும் புரியவில்லையே என்றார் ஸ்ரீதர்.
‘படத்தில் குறவன்- குறத்தி பாடும் பாடல்தானே இது. நரிக்குறவர் பாஷை எனக்கும் தெரியாது. உனக்கும் தெரியாது. இதில் அர்த்தம் புரியாட்டி என்ன? பாட்டை எடுத்துக்கொண்டு போய் ரெக்கார்டு பண்ணு. படம் நல்லா ஓடும்’ என்று சொல்லி அனுப்பினார் ராமையாதாஸ்.
இதுபோன்ற பழைய பாடல்களைக் குறிப்பிட்டு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார் வைரமுத்து. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,
முக்காலும் காலும் ஒண்ணு
ஒங்கக்காளும் நானும் ஒண்ணு
என்றெல்லாம் பாட்டெழுதினார்கள். இப்படி இருந்த தமிழ்த் திரைப்பாடலில் படிமங்களைப் புகுத்தி புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளேன் என்றார்.
வைரமுத்து இப்படிச் சொல்லிய சில மாதங்களில் அம்மன்கோவில் கிழக்காலே படம் வெளியானது. அந்தப்படத்துக்காக
நம்ம கடைவீதி கலகலக்கும்
என் அக்காமக அவ நடந்து வந்தா
என்ற பாடலை எழுதினார் வைரமுத்து. இந்தப் பாடலில், ‘முக்காலும் காலும் ஒண்ணு’ என்ற பழைய பாடல் வரியை அப்படியே எடுத்து கையாண்டுள்ளார்.
கடைவீதி கலகலக்கும் பாடலில்
அடி முக்காலும் காலும் ஒண்ணு
இனி ஒண்ணோட நானும் ஒண்ணு
என்று எழுதி புதிய ‘பரிணாம’த்தை ஏற்படுத்தியுள்ளார்.
துõக்குத் துõக்கி படத்தில் ஒரு பாடல். மருதகாசி எழுதியது.
கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த
மின்னொளியே ஏன் மவுனம்
வேறெதிலே உந்தன் கவனம்
என்று எழுதியுள்ளார் மருதகாசி. இந்தப் பாடல் முடியும்போது,
கண்வழி புகுந்து கருத்தினில் கலந்தே
கனிவுறும் காதல் ஜோதி
காண்போமே பாதி பாதி
என்று முடிகிறது.
இந்தப் பாடல்தான், வைரமுத்துவின் சிந்தனையில் புதிய ‘பரிணாமம்’ பெற்று
அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெற்றுள்ளது.
கண்வழி புகுந்து கருத்தினில் கலந்தே
கனிவுறும் காதல் ஜோதி
என்ற வரிகளை
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
என்று எழுதுகிறார் வைரமுத்து.
சங்கர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனபடம் முதல்வன். இதன் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்தப் படத்தில் வரும் ‘உப்புக் கருவாடு ஊற வச்ச சோறு’ என்ற பாடலும் சூப்பர் ஹிட். வைரமுத்து எழுதியது.
இந்தப் பாடலைக் கேட்ட நண்பர் ஒருவர், அதில் வரும் ஒரு வரியைச் சொல்லி, ‘ஆஹா...என்ன அற்புதம்’ என்று வியந்து பாராட்டினார். உடனே நான், அந்த வரி எங்கிருந்து வந்தது என்பதை அவருக்குச் சொன்னேன்.
“அப்படியா? பாடலைக் கேட்டபோது நான் வியந்துபோனேன். அதை பொசுக்கென்று ஆக்கிவிட்டீர்களே” என்றார்.
எடுத்தது எங்கே?- 8
30.12.12
முதல்வன் படப் பாடலான ‘உப்புக்கருவாடு ஊறவச்ச சோறு’ பாட்டில் வரும்
‘முத்தமிட்டு நெத்தியில
மார்புக்கு மத்தியில
செத்துவிட தோணுதடி எனக்கு’
என்ற வரிகளைச் சொல்லிதான் வியந்துபோனார் நண்பர்.
இதைக் கேட்டதும் நான் சொன்னேன்...
நாகூர் அனீபா பாடிய ‘மதினா நகருக்கு போக வேண்டும்’ என்ற பாடலில்,
நேருக்கு நேர் நின்று
நெஞ்சத்தில் முகம் வைத்து
ஆரத் தழுவி என் ஆவி பிரிய வேண்டும்
என்று வரும் எனச் சொன்னேன். அதற்கு மேல் நான் எதுவும் விளக்கக்கூட வில்லை. ‘ அப்படியா? என்னமோ நினைச்சு வியந்தேன்...பொசுக்குன்னு ஆக்கிட்டிங்களே’ என்றார் நண்பர்.
மனிதன் திரைப்படத்தில் இடம் பெற்ற
வானத்தைப் பார்த்தேன்;
பூமியைப் பார்த்தேன்;
மனுஷனை இன்னும் பார்க்கலையே
பாடலில்,
குரங்கினில் இருந்து பிறந்தானா?
குரங்கை மனிதன் பெற்றானா?
இரண்டு பேரும் இல்லையே!
அது ரொம்ப தொல்லையே!
என்று வரும். இதைக் கேட்டவுடன் பாவேந்தர்தான் என் நினைவுக்கு வந்தார்.
குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்கிறது டார்வின் தத்துவம். சிலரைப் பார்த்து ‘ அவனா? அவன் கிடக்கிறான் குரங்குப் பயல்’ என்று சிலர் திட்டுவதைப் பார்க்கிறோம். குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்று பொருளில்தான் இப்படி திட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, குரங்கின் குணம் அவனிடம் இருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனாலும் குரங்கில் இருந்து மனிதன் வந்தானாஉ மனிதனில் இருந்து குரங்கு பிறந்ததா என்ற ஒரு விவாதமும் ஏனோ இருந்துகொண்டுள்ளது.
இதைத்தான் பாவேந்தர் பாரதிதாசன் ஒரு கவிதையில்
குரங்கினின்று மனிதன் வந்தானா?
மனிதனிலிருந்து குரங்கு வந்ததா?
வையகத்தை வைதிலேன்
ஐயப்பட்டேன், ஆய்க அறிஞரே!
என்று எழுதியுள்ளார். இந்தக் கவிதையில் வரும் அதே வரிகளும் அதே கருத்தும்தான் வைரமுத்து எழுதியுள்ள மனிதன் படப்பாடலில் அப்படியேயும் கொஞ்சம் உருமாற்றம் பெற்றும் இடம் பெற்றுள்ளது.
- 2 people like this.
- Ashokan Subbarayan பாரதிதாசன், நாகூர் ஹனீஃபா, பாரதியார், கண்ணதாசன் என்று பலரது பாக்களையும் பாக்கலாம்னுதான் போனார். ஆனா பருங்க... நீங்க மட்டும்தான் அவரு பாத்தத உத்து பாத்துருக்கீங்க. தொட்டால் பூ மலரும்; சுட்டால் அறிவு வளரும் ’ நன்கு Co-relate செய்து ஒப்புநோக்கியுள்ளீர்கள் ! உங்கள் முயற்சி நல்வினையாகிறது
- Kumar Ramasamy vivakaarm aagamal irunthaal sari doctor.
- Ashokan Subbarayan இதில் விவகாரம் ஆக என்ன இருக்கிறது? சொல்லப் போனால் உங்கள் உழைப்புக்கு வெயிட்டாக ஒரு கவர் குடுத்து அந்த நூலையும் அவரே வெளியிட்டார்னா உங்களைவிட அவருக்கு அதிகமான மைலேஜ் கிடைக்கும். நான் சொல்வது தவறில்லை என நினைக்கிறேன். சரியா?Yesterday at 4:03am · Like
எடுத்தது எங்கே -9
06.1.2013
'அவரைக்குப் பூவழகு
அவ்வைக்கு கூனழகு'
என்று ஒரு பழயை தனிப்பாடல் உண்டு. இதை வைத்து, எதெல்லாம் எதற்கு அழகு என்று சிந்தித்தார் வைரமுத்து. அதில் பிறந்ததுதான் ‘புதிய முகம்’ படத்தில் வரும்
கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
என்ற பாடல். அவரைக்குப் பூவழகு என்ற தனிப்பாலின் நீட்சிதான் புதிய முகம் பாடல்.
இதே போல, திருடா திருடா படத்துக்கு
‘கண்ணும் கண்ணும்
கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்
என்று முதல்வரியை எழுதிய வைரமுத்து, அடுத்து எது எதுக்கு என்ன அர்த்தம் என்று சிந்தித்தார்.
பூவை வண்டு கொள்ளையடித்தால்
புதையல் என்று அர்த்தம்
புதையல் என்னை கொள்ளையடித்தால்
மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்
என்ற அழகிய பாடல் வரிகள் பிறந்தன. ஆனால், இந்தப் பாடலில் ஒரு வரியில் சிக்கிக்கொண்டார் வைரமுத்து. அதாவது,
அழகு பெண்ணின்
தாயார் என்றால்
அத்தை என்றே
அர்த்தம் அர்த்தம்
என்று எழுதி கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அழகான பெண்ணையெல்லாம் மணந்துகொள்வதற்கான முறைப் பெண்ணாக பார்க்கும் பார்வைதான் இந்த வரிகள். மனைவியைத் தரவிர மற்ற பெண்களை தாயாக, தங்கையாக, தமக்கையாக கருத வேண்டும் என்று போதிக்க வேண்டிய சமூகப் பொறுப்பு கவிஞனுக்கு உண்டு. அதுதான் இந்தியப் பண்பாடு.
வானும் மண்ணும் ஹேண்ட் ஷேக் பண்ணுது
உ<ன்னால் ஈஸ்வரா...
என்ற பாடலில்
‘பிரியமா பெண்ணை ரசிக்கலாம்’
என்று ஒரு வரி வரும். தமிழ் தெரியாத உதித் நாராயணன் இந்தப் பாடலைப் பாடும்போது, பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்’ என்று பாடினார். நல்ல வேளை ரெக்கார்டிங் நடந்த போது அருகில் இருந்த வைரமுத்து, உடனடியாக தலையிட்டு அதை திருத்தினார். இது பற்றி குறிப்பிட்ட வைரமுத்து,
‘பிரியமா பெண்ணை ரசிக்கலாம்’ என்பதை ‘பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்’ என்று பாடினார். நான் அருகில் இருந்ததால் பாடல் தப்பியது. பாட்டு கெட்டாலும் பரவாயில்லை; பண்பாடு கெடலாமா?’ என்று சொன்னார்.
இப்படி பண்பாடு பற்றி பேசிய வைரமுத்துதான், ‘அழகு பெண்ணின் தாயார் என்றால் அத்தை என்றே அர்த்தம்’ என்று எழுதினார். அவரை விமர்சித்தவர்கள், தங்கை அழகாக இருந்தால் அம்மாவை அத்தை என்று அழைக்க முடியுமா? என்று கேட்டனர்.
இந்தப் பாடலில்
இரவின் மீது வெள்ளையடித்தால்
விடியல் என்றே அர்த்தம்
என்று ஒரு வரி வரும்.
குடும்ப விளக்கு காவியத்தில்
'தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த
கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது
புலர்ந்திடப் போகும் பொழுது, கட்டிலில்
மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள்'
என்று வரும் வரிகளில் விடியலை வர்ணிக்கிறார் பாவேந்தர். எப்படி?
ஒரு தொட்டி நிறைய நீலம் கரைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அதில் சுண்ணாம்பை கலந்தால் எப்படி இருக்கும்? அத போல, விடியலில் இருள் தன் கட்டுக் குலைந்தது என்று சொல்கிறார்.
'தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த
கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது' என்ற வரிகள்தான்
இரவின் மீது வெள்ளையடித்தால்
விடியல் என்றே அர்த்தம்
என்று உருமாற்றம் பெற்றுள்ளது.
முதலாளி படத்தில் ' ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி' என்ற பாடல்தான் ரஜினி நடித்த முத்து படத்தில்
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
என்று உருமாற்றம் பெற்றுள்ளது. இதை எழுதியவரும் வைரமுத்துதான்.
(எடுத்தது வரும்)You and 9 others like this.Abubackar Sidique "மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேண்டாம்.
ஒரு கறுப்புக் குடை காட்டி
யாரும் கதவடைக்க வேண்டாம்."
இந்த பாட்டு எப்படி?M.k. Jayasreekrishnan sir super sir amazing enna oru searchingAshokan Subbarayan '
இரவின் மீது வெள்ளையடித்தால் விடியல் என்றே அர்த்தம்.'புரட்சிக்கவியைக் கொள்ளையடித்தால் கவிதை என்றே அர்த்தம்’ ...
நீல சாயம் வெளுத்துப் போச்சு..டும் டும் டும்’.முதலில் எழுதியவன் முதலாளி....அதை அடித்து எழுதுபவன் அறிவாளியா.?அசலுக்கு அரசர் பட்டம் (பாவேந்தர்) சுட்டவருக்கு பேரரசர் பட்டமா? பலே..!குமார் சாரின் கடின உழைப்பு நன்கு புலப்படுகிறது !
January 7 at 10:27pm · Like
Kalaichelvan Rexy Amirthan நண்பரே..
வைரவரின் பாடல்களில் காமரசம் கொட்டுவதை பல பாடல்களில் நானும் அவதானித்துள்ளேன். எதுவும் இலைமறை காயாக இருந்தால் தான் ரசிக்கலாம். கவிதைகளும் அப்படித்தான்.ஆனால் வைரவர் கொஞ்சம் அதிகமாக காமத்தில் மிதப்பது முகம் சுழிக்க வைக்கக் கூடியதுதான். அதை நானும்...See More
Kalaichelvan Rexy Amirthan வைரவரை உருவாக்கிய பாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்களமல்லவா?? http://www.youtube.com/watch?v=SfQViUX5Lp4
Kalaichelvan Rexy Amirthan ஆனையின் தந்ததை லதாவுடன் ஒப்பிடும் அந்தக்கால கவிஞர்.. http://www.youtube.com/watch?v=uH0dAmHhWok
Kumar Ramasamy நண்பரே
இந்த பதிவில் நான் குறிப்பிட்டிருப்பது காம ரசத்தை அல்ல. அழகு வபெண்ணின்
தாயார் என்றால அத்தை என்றே அர்த்தம் என்று எழுதுவது எப்படி இருக்கிற்து?
அழகான பெண்ணையெல்லாம் பெண்டாட நினைப்பதுதானே அது. இப்படிப்பட்ட மனோபாவம்
இருப்பதால்தான், டில்லி ச்ம்பவம் நடந்தது.
ஒரு கவிஞர் இப்படிப்பட்ட மனவிகாரத்தை ஏற்படுத்தலாமா எனபதுதான் இங்கே நான்
கேட்டிருப்பது. பெண்ணை போகப்பொருளாகவும்,பெண்ணின்பத்தை எப்படியெல்லாம்
வைரமுத்து சிலாகித்து எழுதி உள்ளார் என்பதையும் அலசினால் ஒரு புத்ததகம்
போதாது. நண்பரே உங்கள் ரசனை வியக்க வைக்கிற்து, ’துணி போட்டு மறைத்தாலும்
பளளிச்சென்று தெரியாதோ இளமாங்காய் முன்னே” இதுவும் எம்ஜிஆர் பாடல்தான்.
‘காட்டு ராணி; முகத்தை காட்டு ராணி...நாட்டு ராஜா சுகத்தை நாட்டு ராஜா”
இந்த வரிகளில் உள்ளர்த்தம் இல்லாமலா இருக்கிற்து? கதையையே முடித்துவிட்டாரே
கண்ணதாசன்.
You like this.Ashokan Subbarayan தம்மாத்தூண்டு காம்பு அத்தாம் பெரிய பலாப் பழத்த தாங்குது. பெரும் இலக்கியங்களிலிருந்து சின்னதா சுட்டத அவ்ளோ பெரிய தமிழ் இரசிகர்கள் தாங்குவாங்க என்ற நம்பிக்கையில்தானே எடுத்துப் போட்டேன். அதக் கொத்து புரோட்டா போல பிச்சுப் போடுறீங்களே Kumar Ramasamy சார் ! ஜீன்ஸயும் கிழிக்கப்போறீங்கன்னு ட்ரைலர் வேறயா? அப்பீட் ...! பர்கரையும் பாயாசத்தையும் பருகியுள்ளீர்கள் !32 minutes ago · Like ·
எடுத்தது எங்கே?- 11
21-01-2013
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் புதுக்கவிதை உச்சத்தில் இருந்தது. 1983ல் நான் மாணவனாக இருந்தபோது, ‘இருட்டுச் சுவடு’ என்ற புதுக்கவிதை நுõலை வெளியிட்டேன். எனது நண்பர் மருதுõர் அரங்கராசன் ஒரு இலக்கணப் புலவர். எனது புதுக்கவிதை நுõலைப் படித்துவிட்டு அவருக்கும் புதுக்கவிதை எழுதும் ஆசை பிறந்தது. நிறைய எழுதி எடுத்துவந்து என்னிடம் கொடுத்தார். அதில் ஒரு கவிதை,
பிரம்மனை
கஞ்சன் என்றுதான்
நினைத்தேன்
உன் இடையைப்
பார்த்தபோது.
பிறகுதான் தெரிந்தது
அவன்
வள்ளலாகவும் இருக்கிறான்
என்று எழுதியிருந்தார். அதைப் படித்த நான்,
‘பிறகுதான் தெரிந்தது’
என்று இருந்தால் சட்டென்று புரியாது என்று சொல்லி,
‘சற்று நிமிர்ந்தபோதுதான் தெரிந்தது’
என்று மாற்றினேன். கவிதைகளை தொகுத்து ‘ஓர் அழுகை ஆதரவு தேடுகிறது’ என்ற பெயரில் நுõலாக வெளியிட்டார் அரங்கராசன்.
அந்த நுõலுக்கு கவிஞர் மு. மேத்தாவிடம் அணிந்துரை வாங்கினார். மேத்தா என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ‘கவிதைக் கன்னி இவருக்கு கடைக் கண் காட்ட மறுக்கிறாள்’ என்று அணிந்துரையில் குறிப்பிட்டார். நுõல் வெளியானதும், உவமைக் கவிஞர் சுரதாவிடம் கவிதை நுõலைக் கொடுத்தோம். மேத்தா எழுதியதைப் படித்த சுரதா, “நீ இலக்கணப்புலவன்; அவரிடம் அணிந்துரை வாங்கிதான் நீ விளம்பரம் தேடணுமா? பல்லுக்கு ஏன் வெள்ளை அடிக்கிறாய்?” என்று கேட்டார்.
இந்த நுõலில் இடம் பெற்ற ஒரு கவிதையை, தான் மிகவும் ரசித்ததாக ஒரு வார இதழில் எழுதினார் வைரமுத்து. அவர் எழுதியது இதுதான்...
“இன்னும் ஒரு கவிதை. அங்க வர்ணனையைக்கூட ஒரு கவிஞன் எவ்வளவு அழகாகச் சொல்லியிக்கிறான் என்று வியந்து வியந்து வியப்பின் உச்சிக்குச் சென்று விழுந்துவிட்டேன்.
நுட்பமான ஒரு விஷயத்தையும் அவன் செப்பமாகச் சொல்லியிருக்கிறான்.
நான் படித்த அந்தக் கவிதை நயமாக இருக்கிறது.
ஆனாலும் உங்களுக்குச் சொல்ல எனக்குப் பயமாக இருக்கிறது.
தன் காதலியைப் பார்த்து அவனது கவிதை கண்ணடிக்கிறது.
பிறகு சொல்கிறது:
பிரம்மனை கஞ்சன் என்றுதான்
நினைத்தேன்
உன் இடையைப் பார்த்தபோது
சற்று நிமிர்ந்தபோதுதான் தெரிந்தது
அவன்
வள்ளலாகவும் இருக்கிறான்
இப்படியெல்லாம் அழகுணர்ச்சியின் அடையாளமாக புதுக்கவிதை விளங்குகிறது.
இவ்வாறு வைரமுத்து எழுதியது அவருடைய ‘கேள்விகளால் ஒரு வேள்வி’ நுõலில்(எட்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2011, பக்கம் 20) இப்போதும் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கவிதையைத்தான் அப்படியே எடுத்து, ஜீன்ஸ் படத்தில் வரும் ‘அன்பே...அன்பே...கொல்லாதே’ பாட்டில் பயன்படுத்தியுள்ளார் வைரமுத்து. அந்த வரிகள் இதோ....
பெண்ணே உனது மெல்லிடைப் பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைச்சுற்றிப்போனேன்
ஆஹா அவனே வள்ளலடி!
படித்து வியந்த கவிதையை சிலாகித்து எழுதிவிட்டு, அதை அப்படியே எடுத்து திரைப்பாடலுக்கும் பயன்படுத்திக்கொண்ட வைரமுத்து, அந்த கவிதையை எழுதியவர் மருதுõர் அரங்கராசன் என்பதைக்கூட தனது நுõலில் குறிப்பிடவில்லை.
கண்ணதாசனின் ரசிகை ஒருவர் ஒரு பாடல் எழுதி கண்ணதாசனுக்கு அனுப்பினார். நாட்டுப்புறப் பாடல் வரியுடன் தொடங்கிய அந்தப் பாடல் கண்ணதாசனுக்கு பிடித்துவிட்டது. அந்த நேரத்தில் முள்ளும் மலரும் படத்துக்கு பாடல் கேட்டார் இயக்குனர் மகேந்திரன். ரசிகை அனுப்பியிருந்த பாடல், மகேந்திரன் சொன்ன கதைச் சூழலுக்கு பொருத்தமாக இருந்தது.
நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
என்ற பாடல்தான் அது. கண்ணதாசன் உடனே அந்த ரசிகைக்கு கடிதம் எழுதினார். அவர் அனுப்பிய பாடலை திரைப்படத்துக்கு பயன்படுத்திக்கொள்ளலாமா? என்று அனுமதி கேட்டாராம். ரசிகையும் மகிழ்ச்சியுடன் ஒப்புதல் தெரிவித்தாராம். அதன் பிறகே அந்தப் பாடலில் சிறு மாற்றம் செய்து இயக்குனருக்கு கண்ணதாசன் அனுப்பினார் என்று திரையுலக நண்பர் ஒருவர் ஒரு முறை என்னிடம் கூறினார். கண்ணதாசனின் நேர்மை கேட்டு வியந்தேன்.
(எடுத்தது வரும்)Like ·10 people like this.Vani Kalai arumaiyana pathivu...melum puthukavitai patri pathividungalJo Maheswaran Nalla muyarchi.. ThodarattumJanuary 21 at 7:54pm via mobile · Unlike · 1
-----------------------------------------------------------------------------------------------------------
ஜீன்ஸ்(1998ல் வெளியானது) படத்தில் வரும் ‘ஹைர...ஹைர ஹைரோபா’ பாடலில்,எடுத்தது எங்கே- 12
28-01-2013
முத்தமழையில் நனைஞ்சுக்கலாமா
உதட்டின் மேலே படுத்துக்கலாமா
என்று வரிகள் வரும்.
உதட்டின் மேலே படுத்துக்கலாமா என்பதற்கு என்ன பொருள்? உதட்டின் மீது கன்னம் வைத்து படுத்துக்கொள்வதுதானே?
உள்ளத்தை அள்ளித் தா(1995ல் வெளியானது) படத்தில், ‘ஐ லவ் லவ் யூ சொன்னாளே...’ பாடலில்
உள்ளங்கையில் கன்னம் வைத்து
துõங்கப் பிடிக்கும்
என்று எழுதுவார் பழனி பாரதி. இதுதானே ஜீன்ஸ் படப்பாடலில்
உதட்டின் மேலே படுத்துக்கலாமா
என்று உருமாற்றம் பெற்றுள்ளது. உள்ளங்கை, இங்கே உதடு ஆனது அவ்வளவுதான்.
வயல்களில் வேலை செய்யும்போதும், தண்ணீர் இறைக்கும்போதும் அலுப்பு தெரியாமல் இருக்க தமிழ் மக்கள் பாட்டுப் பாடும் வழக்கம் உண்டு. அவர்களே பாட்டுக்கட்டி பாடுவார்கள். ராகமும் அவர்களே. வேலை செய்யும் போது பாடும் பழக்கம் படிப்படியாக பலவற்றுக்கும் பரவியது. தாலாட்டு பாடினர். ஒப்பாரி பாடினர். பின்னர், திருமணத்தின்போதும் மணமக்களின் குடும்பம் மணமக்கள் பற்றி பாடத் தொடங்கினர். இந்த திருமணப்பாடல்கள் மணமக்களுக்கு அறிவுரை கூறுவதாகவும் அமையும்.
செட்டிநாட்டு மக்கள் பாடிய திருமணப்பாடல் ஒன்றில்
வட்டுவப்பை வைக்க மறந்தாலும்
வண்டார் குழலாளை வைக்க மறவாதே
என்று வரும். வட்டுவப்பை என்பது பணம் வைத்து, அதைப் பாதுகாப்பாக இடுப்பில் கட்டிக்கொள்ள பயன்படுத்தப்படும் பை. அப்படி வட்டுவப்பையில் பணத்தை வைத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, அதன்மேல்தான் வேட்டி கட்டுவார்கள். அத்தகைய வட்டுவப்பையை பாதுகாப்பாக வைக்க மறந்துபோனாலும் பரவாயில்லை, வண்டார் குழலாளை அதாவது உன் மனைவியைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மறந்துவிடாதே என்று சொல்கிறது இந்தப் பாடல்.
இத்தகைய பாடல்களை காட்டுப்பாடல்கள் என்றும் நாடோடிப் பாடல்கள் என்றும் சொல்லி வந்தனர். பின்னர், அவற்றை கவுரவிக்கும் வகையில் மக்கள் பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் என்று அழைத்தனர். இத்தகைய பாடல்களை தொகுத்து ‘ஏட்டில் எழுதாக் கவிதைகள்’ என்ற அழகான தலைப்பில் நுõலாக வெளியிட்டுள்ளார் செ. அன்னகாமு.
இந்த நூõலில் வரும் ஒரு பாடல்.
பாடறியேன் படிப்பறியேன்
பள்ளிக்கூடம் நானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன்
எழுத்துவகை நானறியேன்
ஏட்டிலே எழுதவில்லை
எழுதிநான் படிக்கவில்லை
வாயிலே வந்தபடி
வகையுடனே நான்படிப்பேன்
அட அப்படியா என்று வியப்பாக உள்ளதா உங்களுக்கு. நீங்கள் நினைப்பது சரிதான்.
சிந்துபைரவி படத்தில் சித்ரா பாடும் பாட்டுதான் இது. இந்த ஏட்டில் எழுதாக் கவிதையை எடுத்துதான் ஏட்டில் எழுதி இசைத்தட்டில் ஏற்றக் கொடுத்துவிட்டார் வைரமுத்து.
பாடறியேன் படிப்பறியேன்
பள்ளிக்கூடம் நானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன்
எழுத்துவகை நானறியேன்
ஏட்டிலே எழுதவில்லை
எழுதி வச்சு படிக்கவில்லை
என்ற பாடல்தான் அது என்பது சொல்லாமலே உங்களுக்குப் புரியும்.
எழுதி நான் படிக்கவில்லை
என்பதை
எழுதிவச்சு படிக்கவில்லை
என்று மாற்றியதும் அதன் பிறகு வந்த வரிகளை எழுதியது மட்டும்தான் வைரமுத்து செய்திருக்கும் வேலை. பெரும்பாலான திரைப்பட பாடலாசிரியர்களுக்கு, இத்தகைய ஏட்டில் எழுதாக் கவிதைகளில் இருந்துதான் கச்சாப் பொருள் கிடைக்கிறது.
(எடுத்தது வரும்)- 5 people like this.
Kalaichelvan Rexy Amirthan குமார் நீங்கள் எங்கேயோ போயிட்டீங்க... நீங்கள் சொல்வதன் பிரகாரம் பாடறிய்யென் படிப்பறியேன் பாடலை எழுதியதற்கான உரிமை வைரவருக்கு இல்லை.
உங்களின் இந்தத் தொடரை வைரமுத்துவுக்கு அனுப்புகிறீர்களா???January 28 at 9:07am via mobile · Unlike · 2
Kumar Ramasamy நான் அனுப்பவில்லை நண்பரே. ஆனாலும் இது அவருக்கு தொடக்கம் முதலே போகிறது என்பதை இருவருக்கும் பொதுவான சில நண்பர்கள் மூலம் அறிந்தேன். அது மட்டுமல்ல அவர் மகன் கபிலன் வைரமுத்து, எனது நட்பு வட்டத்தில்தான் இருக்கிறார். அதனால் நிச்சயம் வைரமுத்துவுக்கு இது போயிருக்கும். அவர் எதுவும் பதில் சொல்ல மாட்டார். சொன்னால் அவருக்குதான் சிக்கல். முந்தைய பதிவில், ஜீன்ஸ் படத்தின், “ பெண்ணே உந்தன் மெல்லிடை பார்த்தேன் அட்டா பிரம்மன் கஞ்சனடி” பற்றி எழுதியதை படித்தீர்களா?- January 28 at 7:52pm · Edited · Like · 1
- Ashokan Subbarayan ஆரக்கிள் நிறுவனம் டேடாபேஸ் அமைப்பதில் பிரபலாமனவர்கள். எனக்கென்னவோ பேரரசர் எடுத்த ரா மெடீரியலையும் ஃபினிஷ்ட் ப்ராடக்டையும் ஒரு டேடாபேஸில் போட்டால்...கம்யூட்டர் கதறும்னு நெனக்கேன்...
‘சுட்டத்த விட்டுப்புட்டா சொந்தமா வரியே இல்ல..
பழகின பாணியிலே படைப்பது பாவமில்லே..
எல்லாமே எடுத்ததுதான்...ரத்தத்தில் பொறந்த சங்கதிதான்...
சுட்டு எடுத்தத.. புட்டு வைக்கிறத.. நாட்டுநடப்புன்னு சொல்லிடலாம்...January 28 at 7:13pm · Edited · Like · 1 - Kalaichelvan Rexy Amirthan KUMAR Kumar Ramasamy@ பாடறியேன் படிப்பறியேனுக்கு தேசிய விருது கிடைத்ததாக நினைவு... இந்தியா போன்ற பல்லின, பல கலாச்சார நாட்டில் வெளிவரும் நூற்றுக் கணக்கான பன்மொழிப் படங்களின் பாடல்களில் ஒன்றைத் தெரிவு செய்து அதற்குத் தேசிய விருது வழங்குவதென்பது, அந்தப் பாடலுக்கும் அதை எழுதியவருக்கும் கிடைக்கும் மிகப்பெரிய கௌரவம்.
இந்தக் கௌரவத்தை சாதாரண பாடல்களுக்குக் கொடுப்பதில்லை, ஏனைய பாடல்களிலிருந்து வேறுபட்டு, எல்லாவற்றிலும் சிறந்து விருதுக்கான தகுதியிருந்தால்தான் கொடுப்பார்கள். அந்தவகையில் இந்தப் பாடலுக்கு தேசிய விருது எப்படிக் கடைக்கப் பெற்றது ??? அந்த விருது கொடுக்குமுன் அதன் நம்பகத்தனமையும், ஏகபோகமும் ஆய்வு செய்யப் படவில்லையா??
அந்த விருது கிடைத்தபோது ஏன் ஒருவரும் அந்தப் பாடலின் ரிஷிமூலத்தை மத்திய அரசின் தெரிவுக்குழுவுக்கு அறிவிக்கவில்லை?? எதிர்காலத்தில் இந்த விருதின் மேலிருக்கும் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகவல்லவா போகிறது???January 28 at 7:05pm via mobile · Unlike · 2
கார்ட்டூனிஸ்ட் முருகு பாடறியேன்... படிப்பறியேன்... இப்படி எடுத்து எழுதியரை நானறியேன்....- Kumar Ramasamy Kalaichelvan Rexy Amirthan: ஏதோஎழுத தொடங்கினேன். எழுதுகிறேன் ந்ண்பரே. ஆனால் இது தேசிய விருதையே கேள்விக்குள்ளாக்கும் என்றெல்லம் நான் எதிர் பார்க்கவில்லை. ஒரு உண்மையை சொல்கிறேன். இந்த தொடருக்காக நான் அதிகம் உழைக்கவில்லை.பாடலை கேட்கும்போது, படித்தது நினைவுக்கு வருகிறது. ஒப்பிட்டு பார்ப்பதுண்டு. அவை நினைவில் நின்றுவிட்டன. அதைத்தான் எழுதுகிறேன். இதையே ஒரு ஆய்வாக செய்தால் இன்னும் எவ்வளவு வரும் என தெரியவில்லை.
- Kumar Ramasamy Ashokan Subbarayan, கார்டூனிஸ்ட் முருகு இருவரும் சினிமாவுக்கு பாட்டெழுதலாம். நல்ல உல்டா பண்றிங்க.
- கார்ட்டூனிஸ்ட் முருகு உல்டா பண்ணினா கண்டுபிடிக்க நீங்க இருக்கீங்களே?
- Kumar Ramasamy தமிழுக்கு சோறு போடுகிறேன் என நீங்க சொல்ல மாட்டிங்க. அதனால உங்களை விமர்சிக்க மாட்டேன். தாராளமா உல்டா பண்ணி எழுதுங்க.------------------------------------------------------------------------------------------------------------------------------------------Like · · Share
M.k. Jayasreekrishnan sir kalakitenga sir nirrayaperukku padariyen pattu engirinthu eduthathunne theriyathu aduthavan variyai sonthavari endru sonthamkondadiyavarkalukku nalla satayi adiஎடுத்தது எங்கே?- 13
03-02-2013
ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் எனது நண்பர். சிறந்த தமிழறிஞர். நாடறிந்த நல்ல பேச்சாளர். எளிதில் யாரையும் குறை சொல்லமாட்டார். அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார்....
வைரமுத்து ஏன் இப்படி பேசுகிறார்? ஒரு விழாவில் அவர் பேசியதைக் கேட்டேன்.
“நானோ கண் பார்த்தேன்
நீயோ மண் பார்த்தாய்”
என்ற பாடல் வரிகள் இதுவரை எவரும் சொல்லாத ஒன்று. எனது புதிய சிந்தனை’ என்று பேசினார். எல்லாருக்கும் தெரிந்த பிரபலமான திருக்குறள் கருத்துதானே இது. இதைப்போய் தனது புதிய சிந்தனை என்று சொல்கிறாரே என்று வருத்தப்பட்டார் அந்தப் பேராசிரியர்.
யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்
என்கிறார் திருவள்ளுவர்.
இதைத்தான் பேசும் தெய்வம் படத்தில்
உன்னை நான் பார்க்கும்போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
மண்ணை நான் பார்க்கும்போது
என்னை நீ பார்க்கின்றாயே
என்று கண்ணதாசன் எழுதினார்.
இதையேதான் ‘புதியவன்’ படத்தில்
நானோ கண் பார்த்தேன்
நீயோ மண் பார்த்தாய்
என்று வைரமுத்து எழுதியுள்ளார்.
இதே கருத்துப் பட ’புதுமைப் பெண்’ படத்தில்
நான் வந்து பெண் பார்க்க
நீ அன்று மண் பார்க்க
என்று எழுதியுள்ளார் வைரமுத்து. இதைத்தான் தனது புதிய சிந்தனை என்று அவர் சொன்னதாக வருத்தப்பட்டார் தமிழ்ப் பேராசிரியர்.
புதியவன் படத்தில் வரும் இதே பாடலில்
இது என்ன கூத்து அதிசயமோ
இளநீர் காய்க்கும் கொடி இதுவோ
என்று எழுதுவார் வைரமுத்து.
பேசும் தெய்வம் படத்தில் கண்ணதாசன் எழுதிய
‘அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ’ பாடலில் பெண்ணை வர்ணிக்கும்போது,
இள நீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல
மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல
இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல
என்று வரும். ‘இளநீரைச் சுமந்திருக்கும் தென்னைமரம்’ என்பதைத்தான் ‘இளநீர் காய்க்கும் கொடி இதுவோ’ என்று எழுதுகிறார் வைரமுத்து.
அதுமட்டுமல்ல, இதே பாடலில்
பருவம் அடைந்தால்
ஒரு பஞ்சம் இல்லை
அடடா பிரம்மன்
அவன் கஞ்சன் இல்லை
நீயே அழகின் எல்லை
என்று எழுதுகிறார் வைரமுத்து.
பிரம்மனை கஞ்சன் என்றுதான்
நினைத்தேன்
உன் இடையைப் பார்த்தபோது
என்ற புதுக்கவிதையை அப்படியே எடுத்து ஜீன்ஸ் படப்பாடலில் பயன்படுத்தியதை ஏற்கனவே சொன்னேன் அல்லவா? அதைத்தான் இங்கே கொஞ்சம் மாற்றி
பருவம் அடைந்தால்
ஒரு பஞ்சம் இல்லை
அடடா பிரம்மன்
அவன் கஞ்சன் இல்லை
என்று எழுதுகிறார். பரவாயில்லையே, ஒரு புதுக்கவிதையின் சில வரிகள் மட்டுமே பல பாடல்களை எழுத வைரமுத்துவுக்கு உதவி இருக்கிறதே.
புதியவன் படத்தின் இந்த ஒரு பாடலில் மட்டும் ஒரு திருக்குறள், ஒரு கண்ணதாசன் பாடல், ஒரு புதுக்கவிதை ஆகியவற்றின் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. ஆனாலும் இதை திருட்டு என்று சொல்வது தவறு. ஒன்றில் இருந்து எடுத்தால்தான் திருட்டு. பலவற்றில் இருந்து எடுத்தால் அது திரட்டு.
(எடுத்தது வரும்)
முன் வந்த பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://eduthadhuenge.blogspot.in/2012_12_01_archive.html4 people like this.Ashokan Subbarayan பிரமன் கஞ்சனா என்று தெரியாது..ஆனால் நீங்கள் வள்ளல் என்று உங்கள் புலமை சொல்கிறதுu. அருமையான கண்டுபிடிப்பு....
’எம் ஜி ஆர் இருந்தால்..’எடுத்ததெல்லாம் எடுத்தார்..அவர் யாருக்காக எடுத்தார்...? ஒருத்தருக்கா எடுத்தார்...?இல்லை ஊருக்காக எடுத்தார்' என்று பாடுவார் :-)4 hours ago · Like · 2Phoenix Bala அருமை நண்பரே. தொடரட்டும் உங்களது ஆராய்ச்சி.4 hours ago via mobile · Like · 1Kumar Ramasamy நன்றிArunachalam Packiarajan தலையை விரித்து தென்னை போராடுதோ, எதனை நினைத்து இளநீராடுதோ?-கண்ணதாசன். பாலொடு தேன் தரும் செவ்விளநீர்களை ஓரிரு வாழைகள் தாங்கும்-வாலி.3 hours ago · Like · 1Arunachalam Packiarajan நேருக்கு நேர் படத்தில் ஒரு திருக்குறளை அப்படியே பயன்படுத்தி இருப்பார்."கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணிலிருக்கு, இந்தப் பெண்ணிலிருக்கு", இதன் அசல் குறள் -கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள.3 hours ago · Unlike · 2Ashokan Subbarayan Dear Arunachalam Packiarajan : இதைத்தான் வள்ளுவர் ‘இனத்தியல்பதாகும் அறிவு’ என்றாரோ ? மிகச் சரியாக Co relate செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள் !about an hour ago · Like
---------------------------------------------------------------------------------------------------------------------------------
எடுத்தது எங்கே- 14
09 Feb 13
காதலர் இருவர் சந்தித்துக் கொள்கின்றனர். இருவரும் ஒரே ஊரினர் அல்லர். உறவினர்களும் அல்லர். ஒரு இடத்தில் சந்திக்கின்றனர். கண்கள் பரிமாறிக்கொள்கின்றன. இதயம் இடம் மாறுகிறது. காதல் அரும்பியது. அன்பு நெஞ்சங்கள் கலக்கின்றன. அதைப் பற்றி அவர்கள் பேசிக்கொள்கின்றனர். என்ன சொல்கிறார்கள்?
உன் தாயும் என் தாயும் எவரோ. என் தந்தையும் உன் தந்தையும் எந்த வகையிலும் உறவினர்கள் அல்லர். நீயும் நானும் முன்பு ஒருவரை ஒருவர் பார்த்ததுகூட இல்லை. எந்த அறிமுகமும் இல்லாமல் இருந்தவர்கள் நாம். ஆனாலும் நம் அன்பு நெஞ்சங்கள் கலந்துவிட்டன. எப்படி? செம்மண் நிலத்தில் விழுந்த மழை நீர் எப்படி சிவப்பு நிறமாகிறதோ அதைப் போல, அதாவது, நிலமும் நீரும் அதனதன் தன்மை மிகாமல் கலந்து புதுத் தன்மை பெறுவது போல காதலர் இருவர் நெஞ்சமும் கலந்துவிட்டன, பிரிக்க முடியாதபடி.
இப்படி அருமையான கருத்துடைய பாடல் சங்க இலக்கியத்தின் குறுந்தொகையில் வருகிறது.
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
இதுதான் அந்தப் பாடல். காதலர்கள் மனம் கலப்பதை இதைவிட வேறு உவமை மூலம் விளக்க முடியுமா என்பது சந்தேகமே.
குறுந்தொகையின் இந்தப் பாடலை ‘இருவர்’ படத்தில் வரும் ‘நறுமுகையே நறுமுகையே’ என்ற பாடலில் அப்படியே பயன்படுத்தியுள்ளார் வைரமுத்து. அந்தப் பாடல் வரிகள் இதோ...
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
நெஞ்சு நேர்ந்தது என்ன?
யானும் நீயும் எவ்வழி அறிதும்
உறவு சேர்ந்தது என்ன?
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்
உயிர்க்கொடி பூத்ததென்ன
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல்
அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன
‘இருவர்’ படத்தில் காதல் கைகூடுமா? கூடாதா என்று கவலைப்படும் காதலியின் அச்சத்தைப் போக்குவதற்காக காதலன் பாடுவதாக அமைந்த சூழலுக்கு இப்படிப் பாடல் எழுதியுள்ளார் கவிப்பேரரசு.
கடையேழு வள்ளல்களில் ஒருவனான பாரியை, பகைவர்கள் வஞ்சகத்தால் வீழ்த்தி விடுகிறார்கள். அனாதையாகிவிட்ட அவரது இரண்டு மகள்களை புலவர் கபிலர் அழைத்துச் செல்கிறார். ஒரு மாதம் கடந்த பிறகும் தந்தையை இழந்த சோகம் இரண்டு பெண்களுக்கும் தீரவில்லை. இரவு சூழ்கிறது. வானில் வெண்ணிலவு தோன்றுகிறது. அதைப் பார்த்ததும் அந்தப் பெண்களுக்கு தந்தையின் நினைவு வருகிறது. கடந்த மாதம் இதே வெண்ணிலவு நாளில் என் தந்தை இருந்தார். எமது பரம்பு மலையும் எம்மிடம் இருந்தது. இந்த மாதம் வெண்ணிலவு காலத்தில் என் தந்தை இல்லை. எமது குன்றும் பிறர் கொண்டுவிட்டார் என்று பாடுகின்றனர் பாரி மன்னனின் பெண்கள். அந்தப் பாடல்
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர் கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்றெரி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே
சோகத்தை பிழியும் கையறுநிலைப் பாடலான இது புறநானூற்றில் 12வது பாடலாக இடம் பெற்றுள்ளது. இந்தச் சோகப் பாடலின் சொற்களை எடுத்து காதல் பாடலில் கையாளுகின்றார் வைரமுத்து. ஆம். இந்தப்பாடல் இடம் பெறுவதும் இருவர் படத்தின் அதே நறுமுகையே நறுமுகையே பாடலில்தான். அந்த வரிகள் இதோ..
அற்றைத் திங்கள் வெண்ணிலவில்
நெற்றித் தரள நீர் வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா
என்று எழுதியுள்ளார் வைரமுத்து. அன்றொரு நாள் வெண்ணிலவின் ஒளியில் நீர்த்திவலைகள் முத்துப்போல் நெற்றியில் உருள, கொற்றவனுக்குச் சொந்தமான பொய்கையில் நீராடியவள் நீயா? என்று காதலியிடம் காதலன் கேட்கிறான். இதுதான் வைரமுத்து எழுதிய இருவர் படப்பாடலின் பொருள்.
- எடுத்தது வரும்.8 people like this.
- Kalaichelvan Rexy Amirthan வருக..வருக..நண்பா.
- Thenammai Lakshmanan mika arumai. padithen sir.
- Kumar Ramasamy நன்றி மேம்
- Krishnan Arumugam இதை தமிழர் காதலை இழிவுபடுத்தும் ஈனர்களுக்கு அனுப்புங்களேன்..ப்ளீஸ்...
- Kumar Ramasamy அந்த ஈனர்களும் இதை படிக்கிறார்கள். ஆனாலும் திருந்த மாட்டார்கள் கிருஷ்ணன் சார். Krishnan ArumugamKumar Ramasamy Ravi Thangadurai: வாங்க பாஸ் என் கpaதிவை கண்டுபிடித்து படிக்க இவ்வளவு நாள் ஆச்சா?
- Ashokan Subbarayan ’இருவர்’ படம் நான் பார்க்கவில்லை சார்.ஆனால் நீங்கள் இருவர் காட்டும் படம் என்றும் சலிக்காது. பேசாமல் நீங்கள் ஒரு ஸ்ப்ரெட்ஷீட் (Excel) எடுத்து...அதில் வரிசை எண், மூலம் (Piles இல்லை ஒரிஜினல்), மூலத்தை இயற்றியவர், நூல், சுட்டுப்போட்ட பாடல், அது இடம் பெற்ற ...See More
- Kumar Ramasamy எனக்கு எழுததான் முடியும். புள்ளிவிவரங்கள், தரவுகள் சேகரித்து தொகுப்பதெல்லாம் சரிபட்டு வராது
- Ashokan Subbarayan அது சரி...காட்டாற்று வெள்ளத்தை கப் அன் சாசரில் கேட்டால் கஷ்டம்தான் தருவது...!
எடுத்தது எங்கே?- 15
16 Feb 2013
தமிழ்ப் பெண்களுக்கே உரிய சிறப்பு தாலாட்டுப் பாடல். நாட்டுப் புறப்பாடல்களில் தாலாட்டுப் பாடல்களை மட்டுமே தொகுத்து பல தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர். திரைப்படங்களிலும் பல தாலாட்டுப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
பாகப்பிரிவினை படத்தில் ஆண்மகன் ஒருவன் தாலாட்டு பாடுவதுபோல ஒரு காட்சி. சிவாஜிகணேசன் நடித்த படம். பட்டுக்-கோட்டை கல்யாணசுந்-தரத்தை அழைத்து தாலாட்-டுப் பாடல் எழுதச் சொன்னார் இயக்குநர் பீம்சிங். பட்டுக்-கோட்-டையாரும் வந்தார். பொது-வுடமைக் கருத்துக்கள் அனல் தெறிக்க எழுதக் கூடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவருக்கு தாலாட்டுப் பாடல் எழுத வரவில்லை. உடனே அவர், மிகவும் பெருந்தன்-மையோடு, ‘இந்த தாலாட்-டுப் பாட்டெல்லாம் கண்ணதாசனுக்குதான் நல்லா எழுத வரும். அவ-ரை-யே கூப்பிட்டு எழுதச் சொல்--லுங்க’ என்று இயக்குனர் பீம்சிங்-கிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டு-விட்டார்.
அப்போது, சிவாஜிக்கும் கண்ணதா-ச-னுக்-கும் பிரச்னை. தன் படத்துக்கு கவிஞர் பாட்-டெழுதக் கூடாது என்று சொல்லியிருந்தார் சிவாஜி. ஆனாலும் கண்ணதாசனை அழைத்து பாட்டெழுதச் சொன்-னார் பீம்-சிங். “அவருக்குப் பிடிக்காதே” என்று கேட்டாராம் கண்-ணத-õசன். “நீங்கள்தான் எழுது-றீங்கன்னு இப்போதைக்குத் தெரிய வேண்டாம்” என்றார் பீம்சிங். “தெரியாம எப்படிய்யா எழு-து-றது?” என்று கேட்டுவிட்டு பாட்-டெழுதிக் கொடுத்தார் கண்ணதாசன். அந்தப் பாடல்தான்,
ஏன்பிறந்தாய் மகனே
ஏன் பிறந்தாயோ
பாடலைப் பதிவுசெய்து சிவாஜியிடம் போட்டுக்காட்டினார்கள். ஆகா பாட்டு அருமையா வந்திருக்கு என்று பாராட்-டினார் சிவாஜி. பிறகுதான் நடந்ததைச் சொன்னார் பீம்சிங். “கவிஞன் கவிஞன்-தான்-யா” என்று பாராட்டினாராம் சிவாஜி.
கோமல்சுவாமிநாதன் எழுதிய கதை-யை ‘தண்ணீர் தண்ணீர்’ என்று படமாக எடுத்தார் கே. பாலசந்தர். இதில் ஒரு தாலாட்டுப் பாடல் வரும். வைரமுத்து எழுதிய அந்தப் பாடல்...
ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து
தொட்டில் நனைக்கும்வரை உன் தூக்கம் கலையும்வரை
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே
இந்தப் பாடல் பின்னணி இசை எதுவும் இன்றி பி.சுசீலாவின் குரலில் அற்புதமாக ஒலிக்கும். சோகத்தைப் பிழி-யும். தான் எழுதிய பாடல்களில் தனது வாழ்க்கையில் மறக்க முடி-யாத பாடல் இது என்று சொல்வார் வைரமுத்து.
நாட்டுப்புறப் பாடலில் ஒரு தாலாட்டுப் பாடல்....
ஆத்தா நீ அழுத கண்ணீர்
ஆறாகப்பெருகி
ஆனைகுளித்தேறி
குளமாகத்தேங்கி
குதிரை குளித்தேறி
வாய்க்காலாய் ஓடி
வழிப்போக்கர் வாய் கழுவி
இஞ்சிக்கு பாஞ்சு
எலுமிச்சை வேரோடி
மஞ்சளுக்கு பாஞ்சு
மருதாணி வேரோடி
தாழைக்கு பாய்கையிலே
தளும்பியதாம் கண்ணீரும்!
இந்தப் பாடல்தான் தண்ணீர் தண்ணீர் படத்தில் வைரமுத்து எழுதிய பாடலுக்கு வேர் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?
(எடுத்தது வரும்)
2 people like this.
Ashokan Subbarayan குமார் சார்..இதே ரேஞ்சுக்கு நீங்க எழுதினா...க்ஷ (மேற்படி) பாடலில் ‘ஆத்தா’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு ‘வைரமுத்து’ என்று போட்டு படிக்க (பாட?) வேண்டி வரும்னு நெனைக்கிறேன்
February 19 at 8:06pm · Like · 1
--------------------------------------------------------------------------------------------------------
எடுத்தது எங்கே-16
ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியின் கவிதை ஒன்று. அதன் தமிழாக்கம் இதோ:
ஊற்று கலக்கும் ஆற்றோடு
ஆறு கலக்கும் கடலோடு
காற்று கலக்கும் காற்றோடு
கலையா இன்ப உணர்வோடு
தெய்வீக விதியின் துணையோடு
ஒவ்வொரு பொருளும் இணையோடு
ஒன்றாய்க்கலக்கும் உறவோடு – நான்
கலப்பது தவறோ உன்னோடு?
காதலனைப் பார்த்துக் காதலி இப்படி கேட்-பதாக எழுதியிருப்பார் ஷெல்லி. இந்தக் கவிதை-யை, தமிழ்நாட்டில் வழங்கும் ஒரு நாட்டுப்-புறப்-பாடலோடு ஒப்பிடுவார் கவிக்கோ அப்துல் ரகுமான்:
கல்லோட கல்லுரச
கடலுத்தண்ணி மீனுரச
உன்னோடு நானுரச
உலகம் பொறுக்கலியே!
என்ற நாட்டுப்புறப் பாடலை ஷெல்லியின் கவிதையோடு ஒப்பிடும் கவிஞர் அப்துல் ரகுமான்,
ஷெல்லியைப் போலவே “ஒரு நாட்-டுப்-புற பெண் வாதாடு-கிறாள்... ஷெல்லி-யின் வாதங்-களைவிட இந்தப் பெண்ணின் வாதம் பலமானது. கல்லோடு கல் உர-சி-னால்தான் தீப்பொறி பிறக்கும். கடல் நீரோடு மீன் உரசினால்தான் அது உயிர் வாழ முடியும் இவற்றை-யெல்லாஅனுமதிக்கும் உலகம் தங்களை மட்டும் தடுப்-பானேன் என்று கேட்கிறாள். நியாயம்-தானே..!” இப்படி ‘அவளுக்கு நிலா என்று பெயர்’ என்ற ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் அப்துல் ரகுமான்.
இந்த நாட்டுப்புறப் பாடலை,
அப்-துல் ரகுமான் மொழியில் சொல்வ-தானால், ஷெல்-லி-யை வென்ற தமிழ்ப் பெண்ணின் பாடலை ‘அன்புக்கு நான் அடிமை’ படத்-தில் பயன்-படுத்தியுள்ளார் ஒரு கவிஞர்.
அந்தப் பாடல்...
பெண்: காத்தோடு பூவுரச பூவ வண்டுரச
உன்னோடு நான்... என்னோடு நீ...
பூவா காத்தா உரச
ஆண்: காத்தோடு பூவுரச பூவ வண்டுரச
உன்னோடு நான்... என்னோடு நீ....
பூவா... காத்தா.... உரச
இந்தப் பாடலை நாட்டுப் புறப் பாடலோடு ஒப்பிட்டுப் பாருங்களேன்
கல்லோட கல்லுரச
கடலுத்தண்ணி மீனுரச
உன்னோடு நானுரச
என்பதையே
காத்தோடு பூவுரச பூவ வண்டுரச
உன்னோடு நான்... என்னோடு நீ...
என உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்படி நாட்டுப்புறப் பாடல்கள் பலவற்றை அப்படியேயும் உருமாற்றம் செய்தும் திரையுலகுக்கு கொடுத்துள்ளார் வைரமுத்து.
பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்து பெரும் புகழ் பெற்ற படம் அலைகள் ஓய்வதில்லை. அதில் ஒரு பாடல்.
ஆயிரம் தாமரை மொட்டுக்களே- இங்கு
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களேன்
என்று தொடங்கும். மிகவும் பிரபல-மான பாடல் இது. ஒரு நாள், 1981ல் மதுரையில் நடந்த ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டு மலரைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் தமிழ்ப் பெண்களின் விளையாட்டுகளைப் பற்றி விளக்கும் கட்டுரை ஒன்று. அந்தக் கட்டுரையில் பெண்கள் கும்மியடிக்கும் படத்-தைப் போட்டு அதன் கீழ்’
ஆயிரம் தாமரை மொட்டுக்களே- இங்கு
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களேன்
என்று அச்சிடப்பட்டிருந்தது. அதிர்ச்சி எனக்கு. இது வைரமுத்து எழுதிய திரைப்-பாடலா-யிற்றே. இதில் எப்படி இடம் பெற்றது என்று.காரணம், அலைகள் ஓய்வதில்லை படமும் பாடலும் வெளிவரும் முன்பே உலகத்தமிழ் மாநாட்டு மலர் வெளி வந்திருந்தது. ஆராய்ந்து பார்த்-தில், ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்-பது நாட்டுப்புறப் பாடல் என தெரிய வந்தது.
ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியை வெல்லும் நமது தமிழ்ப் பெண்களின் பாடல்களை எப்படி-யெல்லாம் திரைப் படத்தில் பயன்படுத்துகிறார்கள் பாருங்கள். யாரும் உரிமை கொண்டாட முடி-யா-த-வை நாட்டுப்புறப் பாடல்கள். அதனால் அதை யார்வேண்டுமானாலும் எடுத்துக்-கொள்-ள-லாம். கேட்க ஆள் இல்லை என்றால், எழுதியது நானே-தான் என்றும் சொல்லிக்கொள்ளலாம். யார் கேட்கப் போகிறார்கள்.
பாலசந்தர் இயக்கத்தில் வெளியான
‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் வரும் பாடல்,
பெ: மேகத்தைத் தூது விட்டா திசை
மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே.. தண்ணிய நான் தூது விட்டேன்
...
பெ: தண்ணிக்கு இந்தக் கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்கை குறையாம எப்ப வந்து தரப் போற எப்ப வந்து தரப் போற
...
பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ..
...
பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே
ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
...
பெ: ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் கைகளிலே
என்ற பாடலும் நாட்டுப்புறப் பாடல்தான். நன்றாக இருக்கிறதல்லவா? யாருக்கும் தெரி-யா-மல் இருப்பதை ஊருக்கு சொல்லலாமே என்று எடுத்-துக்கொடுத்திருக்கிறார் கவிப் பேரரசு வைர-முத்து.
- எடுத்தது வரும்Ashokan Subbarayan எதோட எது ஒரசுச்சோ தெரீல..ஆனா நீங்க தமிழோடு உரசுரது இருக்கு பாருங்க...அரும..தமிழ்ப் பாடல்கள், அதுவும் பழைய பாடல்கள், இருந்தவர்கள், இருப்பவர்கள் இவங்கள்ட்டேன்ர்ந்தெல்லாம் எடுத்தது போய் ஆங்கிலக் கவிஞர்ட்டேர்ந்தும் சுட்டுப் போட்டது பெரிய விஷயம்தான் என்றாலும் அதை நீங்க கண்டு புடிச்சது புத்திசாலித்தனம்தான்....!Sunday at 3:28pm · Like · 1--------------------------------------------------------------------
எடுத்தது எங்கே?- 17
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண் எலைன் பேஜெல்ஸ். எம். ஏ. படித்து முடித்தபின், ஹார்வர்டு பல்கலைக்-கழகத்தில் டாக்டர் பட்டத்துக்காக சமயங்கள்பற்றி ஆய்வு செய்தார். அவர் எழுதிய THE GNOSTIC GOSPELS என்ற நுõல் சிறந்த நூலுக்கான தேசிய விருது பெற்றது. இந்த நுõலில் வரும் ஒரு சிறு ஆங்கிலக் கவிதை
I am the first and last
I was the honored one and the scorned one
I am the whore and the holy one
I am the wife and the virgin ...
I am the barren one,
and many are my sons ...
I am the silence that is incomprehensible
I am the utterance of my name.
இதன் பொருள்
ஆதியும் நான் அந்தமும் நான்
புகழப்பட்டவனும் நான்
இகழப்பட்டவனும் நான்
புனிதனும் நான் அற்பனும் நான்
காதல் மனைவியும் நான்
கன்னிப் பெண்ணும் நான்
மலடியும் நான்- குழந்தைகள்
பலரின் தாயும் நான்
புரியாத மவுனமும் நான்- என் பெயரை
உறக்கச் சொல்லும் சத்தமும் நான்
இந்தக் கவிதையை வாசித்ததும் உங்களுக்கு ஏதோ நினைவுக்கு வரு-கிறதா? வரணுமே... ‘கன்னத்தில் முத்த-மிட்டால்...’ படத்தின்
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
ஒரு தெய்வம் தந்த பூவே
பாடல் நினைவுக்கு வருகிறதா? ஆம் அதில் வரும் வரிகளைப் பாருங்கள்...
எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!
காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
மரணம் மீண்ட ஜனனம் நீ!
எல்லாம் முரணாக அமைந்திருக்-கி-றதா? எலைன் பேஜஸ் எழுதிய கவிதை-யில் வரும் அதே முரண்தான்.
ஆதியும் நான் அந்தமும் நான்
புகழப்பட்டவனும் நான்
இகழப்பட்டவனும் நான்
புனிதனும் நான் அற்பனும் நான்
என்ற வரிகள்தான் உருமாற்றம் பெற்று வைரமுத்து எழுதிய பாடலில்
எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!
காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!
என்று முரண்களாக முகிழ்கின்றன.
இதே முரணை டூயட் படத்தில் வரும் ஒரு கவிதையிலும் பயன்படுத்தியிருப்பார் வைரமுத்து.
காதலுக்கு கண் திறந்து வைத்தவளும் நீதான்- நான்
காதலித்தால் கண் மூடிக்கொண்டவளும் நீதான்
என்று இரண்டு எதிர்மறையுமே அவள் என்று முரண் வைத்து எழுதியுள்ளார்.
(எடுத்தது வரும்)
Kumar Ramasamy and 13 others like this.
WriterAbraham Lincolnஅந்த ஆங்கில கவிதை எழுதியவர் பெயரை வைரமுத்து ஒருமுறைக்கு பல முறை படித்திருப்பார் போல... "எ லைன் பே ஜெல்ஸ்... "a line pay" ஜெல்ஸ்... அதனால் தான் அவர் வரிகளை இவர் காசாக்கிகொண்டார்...
Sunday at 4:37pm · Unlike ·
Vani Kalai koormaiyana paarvaiyil alasi arainthu eluthirukingaSunday at 8:12pm · Unlike · 2
Ashokan Subbarayan முரணாகப் பாடியதை முரண்டு பிடித்துப் போட்டுவிட்டீர்கள் ! தமிழ்ப் பாட்டுல சுட்டது போய் இப்போ ஆங்கிலப் பாடலில் கையை வைத்தாயிற்றா ?இந்த ரெண்டு மொழிகள் மட்டும்னா எனக்கு பிரச்சினை இல்லை - கமெண்ட் போட ! பிற மொழி தெரியாதே எனக்கு ! பேசாம நீங்க ’எடுத்தது எங்கே - தமிழ்?’ , ’எடுத்தது எங்கே - ஆங்கிலம்?’ என்று மொழிவாரியாகப் போடலாம் .
Sunday at 10:15pm · Unlike · 4
M.k. Jayasreekrishnan sir avaravar sontha karpanai than kavithaiyai padalai varum ethu aduthavana copy adichu ezutharatha enna solla ungalidam vairamuthu murandu pidikkama iruntha sari
- Monday at 3:58am · Like · 1
- Geetha Manivannan நான் எழுதுதியது ஆனால் எனது வரிகள் இல்லை.....
- Kumar Ramasamy ஹ ஹ ஹா இது நல்ல இருக்கு கீதாMonday at 11:37am · Unlike · 3
- Thenammai Lakshmanan மிக அருமை சார்.. அசத்துறீங்க.. எங்கே எல்லாம் போய் கண்டு பிடிக்கிறீங்க.. !..Monday at 11:40am · Like · 1
- Kumar Ramasamy Thenammai Lakshmanan:என்ங்கேயும் போவதில்லை. எப்போதோ படித்தது நினைவில் இருந்து தொலத்துவிடுகிறது. கொஞ்சம் நினைவாற்றல் இருப்பதால் வந்த விளைவு இது.Monday at 11:44am · Edited · Unlike · 2
- Monday at 5:18pm · Like · 1

Vaduvur Rama நைஸ் சார்Monday at 5:27pm · Like · 1
ஃபீனிக்ஸ் பாலா நன்றி நண்பரே.உங்களது பதிவுகளை படிக்கையில்பற்பல படைப்பாளிகளின் படைப்புகளும் ஐயத்தை ஏற்படுத்துகின்றன. நல்லதோர் ஆராய்ச்சி. தொடருங்கள் நண்பரே. ----------------------------------------------------------------------------
எடுத்தது எங்கே - 18முதல்வன் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் வரும் ‘உப்புக் கருவாடு ஊறவச்ச சோறு ஊட்டிவிடு நீ எனக்கு’ என்ற பாடல் காட்சியில் ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேட்டிசட்டையை கதாநாயகியும், கதாநாயகியின் பாவாடை தாவணியை கதாநாயகனும் அணிந்து மகிழ்வார்கள்.காதலர்களும், அன்புடைய புதிய தம்பதி-கள் இப்படி உடையை மாற்றி அணிந்து-கொள்வது இன்று நேற்றல்ல, சங்ககாலம் தொட்டு இந்தப் பழக்கம் இருந்து வருகிறது.சங்க இலக்கியமான ‘பத்துப் பாட்டு’ தொகுப்பில் உள்ள பட்டினப் பாலையில் ஒரு பாடல்.துணைப் புணர்ந்த மடமங்கையர்பட்டு நீக்கித் துகில் உடுத்து,மட்டு நீக்கி மது மகிழ்ந்து,மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்,மகளிர் கோதை மைந்தர் மலையவும்என்று வரும் அந்தப் பாடல்.இதன் பொருள்....துணைவரைக் கூடி மகிழும் மங்கையர், பகல் நேரத்தில் அவர்கள் அணிந்-திருந்த பட்டாடையை நீக்கி பருத்தி ஆடையை அணிவர். தலைவன், மது அருந்துவதை தவிர்த்து, காதல் இன்பத்தில் திளைப்பான். அவன் அணிந்திருந்த மாலையை அவ-ளும், அவள் அணிந்திருந்த மாலையை அவனும் அணிந்து மகிழ்வார்கள்.இதில்பட்டு நீக்கித் துகில் உடுத்துஎன்பது இங்கே மிக முக்கி-யமான வரி. இந்த வரிக்கு இரண்டு விதமாக பொருள் கூறுகின்றனர்.மணமான மகளிர், பகலெல்லாம் அணிந்த பட்டாடையைக் கழற்றிவிட்டு, மென்-மையான பருத்தி ஆடையாகிய துகில் அணிகிறார்கள் என்பது ஒரு விளக்-கம்.பெண் தன்னுடைய பட்டாடையைக் களைந்துவிட்டு, கணவனின் ஆடையை அதாவது துகிலை அணிகிறாள் என்பது இன்னொரு விளக்கம். இப்படி ஆணும் பெண்ணும் ஆடைகளை மாற்றி அணிந்து மகிழும் வழக்கம் சங்க காலம் தொட்டு இருந்துவருகிறது.இதைத்தான் ‘அலைபாயுதே’ படத்தில் வரும் ‘சிநேகிதனே... ரகசிய சிநேகிதனே’ பாட்டில் எடுத்தாண்டுள்ளார் வைரமுத்து. சிநேகிதனே பாடலில்சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்காதில் கூந்தல் நுழைப்பேன்உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்என்று வரும். இதில்,‘உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்’ என்பது, அவன் சட்டையை அவள் அணிந்து மகிழ்வதைச் சொல்-கிறாள். ‘பட்டு நீக்கித் துகில் உடுத்து’ என்-பது-தான் இங்கே இப்படி சொல்-லப்-பட்-டுள்-ளது.மதுரை அமெரிக்கன் கல்லுõரியில் கவியரசர் கண்ணதாசன் தலைமையில் ஒரு கவியரங்கம்.கண்ணதாசன் கவிதை படிக்கும் முன்பு ஒரு மாணவர் கவிதை படித்தார். எந்த கைத்தட்டலும், ஆரவார வரவேற்பும் இல்லை. அவரது கவிதை வரிகளை பெரி-தாக ரசிக்கவும் இல்லை. அடுத்து கண்ணதாசன் கவிதை வாசித்தார். வரிக்கு வரி பலத்த கைத்தட்டல். மகிழ்ச்சி ஆரவாரம். கவிதையைப் படித்து முடித்த பின் கண்-ணதாசன் பேசினார். அவர்சொன்னது:நான் வாசித்த கவிதைக்கு இந்த அளவுக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு கண்டு மகிழ்கிறேன். அது நான் வாசித்த கவிதைதான். நான் எழுதிய கவிதை அல்ல. எனக்கு முன் கவிதை படித்தாரே ஒரு மாணவர் அவர் எழுதிய கவிதை-யைத்-தான் நான் படித்தேன். அவர் படித்தது நான் எழுதிய கவிதையை. நான்தான் அப்-படி செய்யச் சொன்னேன். அந்த மாணவர் எழுதிய கவிதையை நான் படித்த போது கைதட்டிய நீங்கள், என் கவிதையை அந்த மாணவர் படித்தபோது கைதட்டவே இல்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது. யார் சொல்கிறார் என்றுதான் பார்க்கிறீர்கள். என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பதில்லை நாம். யார் சொன்னாலும் நல்ல வரி-க-ளை வரவேற்க வேண்டும். பிரபல-மான-வர்-கள் சொன்னால்தான் வரவேற்பது என்ற நம் மனநிலை மாறவேண்டும்.கண்ணதாசனின் இந்தப் பெருந்-தன்-மைக்கு யாராவது நிகர் உண்டா?-எடுத்தது வரும்....
------------------------------------------------------------------------------------------------எடுத்தது எங்கே - 19கோடை வெயில் கொளுத்துகிறது. ஒரு பாறை மேல் ஒரு பெரிய வெண்ணை உருண்-டை வைக்கப்பட்டுள்ளது. வெயி-லில் அது உருகுகிறது. அதன் முன் ஒருவன் நிற்-கிறான். அந்த வெண்ணை உருகி வீணா-கா-மல் பாதுகாக்க வேண்டும். அவனுக்கோ இரண்டு கைகளும் இல்லை.வெண்--ணை-யை அவனால் வேறுஇடத்-துக்கு எடுத்துச் செல்ல முடியாது. யாரையாவது அழைத்து அதை எடுத்து நிழலில் வைக்கச் சொல்லலாம் என்றால், அவன் பேசும் திறன் அற்றவன். கையில்-லாத-தால் சைகையாலும் யாரையும் அழைக்க முடியவில்லை.கைகள் இல்லாத, வாய் பேசமுடியாத ஒருவன், பாறைமீது வெயிலில் உருகும் வெண்ணையை பாதுகாக்க முடியாமலும், அதைப்பற்றி பிறரிடம் சொல்லவும் முடியா-மலும் எப்படி தவிக்கிறானோ அதைப் போல, காதல் நோயைப் பொறுத்-துக் கொள்ள முடியாமலும், யாரிடமும்சொல்ல முடியாமலும் தவிக்கிறான் தலை-வன்.இது சங்க இலக்கியப் பாடல் ஒன்றின் கருத்து இது. வெள்ளிவீதியார் என்ற புலவர் எழுதியது.குறிஞ்சித் திணையின் அந்தப் பாடல் இதோ...இடிக்கும் கேளிர்! நும்குறை யாகநிறுக்கல் ஆற்றினோ நன்றுமன், தில்லஞாயிறு காயும் வெவ்அறை மருங்-கில்கை இல் ஊமன் கண்ணின் காக்கும்வெண்-ணெய் உணங்கல் போலப்பரந்தன்று இந்நோய், நோன்று கொளற்கு அரிதே.இதே பொருள் கொண்ட திரைப்பாடல் ஒன்று உண்டு. அது இதோ...செந்தீ விழுந்தசெம்-பொற் பாறையில்மந்தி உருட்டும் மயிலின்முட்டையாய் இதயம்உடலில் இருந்து விழுந்துஉருண்டு புரண்டு போகுதேமேலே சொன்ன சங்கப்பாடலின் உருமாற்றம்தான் இந்தப் பாடல் என்பது படிக்கும்போதே புரிகிறதல்லவா? இந்தப் பாடல் எங்கோ கேட்ட மாதிரி இருக்கி-றதா? நிச்சயமாக நீங்கள் கேட்டிருக்க மாட்-டீர்கள். காரணம், இந்தப் படமே இன்னும் வெளியாகவில்லை. ஆனால் படித்திருப்பீர்கள்.ஆமாம், கோச்சடையான் படத்துக்கு வைரமுத்து எழுதியுள்ள பாடல்தான் இது. சமீபத்தில் வார இதழ் ஒன்றில், தான் எழுதிய அற்புதமான பாடல் என்று சிலா-கித்து, இந்தப் பாடலை கொடுத்திருந்தார் வைரமுத்து.இந்த பாடலில் அடுத்த பகுதி இதோ....சிறுகோட்டுப் பெரும்பழம்துõங்கியாங்குஎன் உயிரோ சிறிதேஎன் காதலோ பெரிதேஇந்த வரிகளும் எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதா? இருக்கும்.மண்வாசனை படத்தில் வரும் ‘பொத்தி வச்ச மல்லிகை மொட்டு’ பாடலில்,‘சின்னக் காம்புதானே பூவத் தாங்குது’ என்ற கருத்து கபிலர் எழுதிய குறுந்தொகைப்பாடலின் உரு-மாற்-றம் என்று ஏற்கனவே சொல்லி-யிருக்-கி-றேன் அல்லவா? அதுதான் இது.கோச்சடையானில் குறுந்தொகைப் பாடல் வரிகளை அப்படியே எடுத்துப் போட்டுள்ளார்.வரல் வேலி வேர்கோட் பலவின்சார னாட செவ்வியை யாகுமதியாரஃ தறிந்திசி னோரே சாரற்சிறுகோட்டுப் பெரும்பழந் துõங்கி யாங்கிவள்உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.இதுதான் அந்தக் குறுந்தொகைப் பாடல். ஒப்பிட்டுப் பாருங்கள். இந்தப் பாடலின் கடைசி இரண்டு வரிகள்தான் வைரமுத்துவின் பாடல். சங்க இலக்கியம் போல பாடல் இருக்கவேண்டும் என்று இயக்குனர் கேட்டிருப்பார் போலும். போல எதற்கு சங்க இலக்கியத்தையே தருகிறேன் என்று எடுத்துக்கொடுத்துவிட்டார் கவிப்பேரரசு.(எடுத்தது வரும்)........
--------------------------------------------------------------------------------------------------------------------------எடுத்தது எங்கே - 20ரெயின்போ காலனி’ படத்தில் வரும் ‘கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ பாடல் சூப்பர் ஹிட் ஆனது. நண்பர் நா.முத்துக்-குமார் எழுதிய பாடல் இது. காரைக்காலைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் பேசிக்-கொண்-டிருந்தபோது, இந்தப் பாடல் பற்றி அவர் சொன்னார்.‘முத்துக்குமாருக்கு சிறந்த பாடலா-சிரி-யருக்-கான விருது பெற்றுக்கொடுத்த பாடல் ‘கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’. இதற்காக அவருக்கு பாராட்டு விழா நடந்-தது. அதில் பேசிய முத்துக்குமார், ‘கண்-களின் வார்த்தைகள் புரியா-தோ; காத்தி-ருந்-தால் பெண் கனியாதோ’ என்ற பாடலை உல்-டா பண்ணித்தான் இந்தப் பாடலை எழுதி-னேன்’ என்-றார். எவ்வளவு நேர்மை பாருங்கள்’ என்று வியந்து பாராட்டினார்.இப்படி ஒப்புக்-கொண்-ட-வர்கள் பலர் உண்டு. திரு-மூலர் எழுதிய பாடலின் கருத்து-தான், பட்டினத்தார் எழுதிய...‘அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழியம்பொழுகமெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி இருகைத்-தலை மேல்வைத்தழும் மைந்-தரும் சுடுகாடுமட்டேபற்றித் தொடரும் இரு-வினைப்-புண்ணிய பாவமுமே...’என்ற பாடல்.இதே பாடல்தான் பாத-காணிக்-கை படத்தில் வரும்,‘வீடு வரை உறவுவீதிவரை மனைவிகாடுவரை பிள்ளைகடைசி வரை யாரோ...என்ற பாடல். கவியரசு கண்ணதாசன் எழுதியது. ஆனால், இதை ஒப்புக்-கொண்டிருக்கிறார் கண்ணதாசன். இலக்-கியம் சாதாரண மக்களைப் போய்ச் சேராது. அதை எளிமைப்படுத்தி பாமர மக்-க-ளிடம் கொண்டு சேர்க்கிறேன் என்பார் கண்-ணதாசன். பல திரைப்படப் பாடலா-சிரியர்கள் இப்படி செய்திருக்கிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல.ஆனால், இவர்கள் யாரும் ‘தமிழுக்கு நான் சோறு போடுகிறேன்’ என்று சொன்-ன-தில்லை. தமிழ்தான் தங்களுக்கு சோறு போ-டுகிறது; சோறு போடுவது மட்டு-மல்ல, காரும் சீரும் கொடுத்து பேரும் புகழும் கிடைக்கச் செய்துள்ளது என்று-தான் சொல்லியிருக்கிறார்கள்.திரைத்துறையை தீக்குச்சிக்கு தின்னக்-கொடுப்போம் என்று சொன்ன வைரமுத்து, அதே திரைத்துறை மூலம்தான் உச்சம் பெற்றார். தீக்குச்சிக்குத் தின்னக் கொடுக்க வேண்டிய திரைத்துறையை திருத்தினாரா என்றால்,‘கண்ணா என் சேலைக்குள்ளகட்டெறும்பு புகுந்திடுச்சி...’என்று எழுதி அவரும் அதில் அமுங்கிப் போனார்.அவரது ‘ஆயிரம் பாடல்கள்’ நுõலின் முன்னுரையில், ‘ஒரு தலை-முறை தமிழை தந்துவிட்டு அடுத்த தலைமுறை தமிழுக்கு தயாரா-கியிருக்-கிறேன்’ என்று எழுதியுள்-ளார் வைர-முத்து. அவர் அடிக்கடி ‘எனது தமிழாசான்’ என்று சொல்லிக்கொள்ளும் முன்-னாள் முதல்வர் கருணாநிதி கூட, ‘ஒரு தலைமுறைக்கான தமிழை தந்திருக்-கிறேன்’ என்றோ, ’தமிழுக்கு சோறு போடுகிறேன்’ என்றோ சொன்-ன-தில்லை.இவர் புதிதாக எதையும் கொடுத்து-விட-வில்லை. இருப்பதை எடுத்துத்-தான் கொடுத்தார் என்பதை இந்தத் தொடரைப் படிப்பவர்களுக்குப் புரிந்-திருக்-கும்.கடந்த 19 வாரங்களாக நான் ஒப்பிட்டு எழுதிய பாடல்கள், என் நினைவில் இருந்த-வை-தான். இதற்-கென்று தனி-யாக எந்த ஆய்வையும் மேற்-கொள்ள-வில்லை. அப்படி ஒரு ஆய்வை மேற்கொள்வதானால், தமிழ் இலக்கி-யம், தமிழக நாட்டுப்-புறப்-பாடல்கள் மட்டுமல்ல, உலக இலக்கியங்கள் பலவற்றையும் படித்து-விட்டுத்--தான் ஒப்பாய்வு செய்ய வேண்-டும். அப்படிச் செய்தால், இந்தத் தொடர் 100 வாரங்களையும் கடக்-கக்-கூடும். இந்தத் தொடருக்கு வாசகர்கள் கொடுத்த வரவேற்பு நெகிழச் செய்தது.எடுத்தது நிறைந்தது .தொடர்புக்கு: kumarr.editor@gmail.com-----------------------------------------------------------------------------------------------------





















